பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

57


என்னை நகைக்கச் செய்வன நம் அறியாமைகள் அல்ல-நம் அறிவுகளேயாகும்.

-மான்டெய்ன்

ஜீவனத்துக்கான சாதனமாக மட்டுமன்று, ஜீவிதத்துக்கான சாதனமாகவும் மனிதனுக்கு அறிவு தேவை.

-ஆவ்பரி

நூலறிவு பெற்றவன் குளத்தை யொப்பான்; மெய்யறிவு உடையவன் சனையை யொப்பான்.

-ஆல்ஜெர்

பகுத்தறிவு என்பது உண்மையை அறியக் கடவுள் நமக்குத் தந்துள்ள ஒரே புனிதமான சாதனம். நம் அனைவரையும் ஒன்றாய் இயக்கத்தக்கது அதுவே. ஆனால், ஐயோ, நாம் அதைத்தான் நம்புவதில்லையே!

-டால்ஸ்டாய்

நூலறிவு வந்துவிடும், மெய்ஞ்ஞானம் வரத் தயங்குகின்றது.

-டெனிலன்

பிறர் வாசித்திருந்த அளவு நானும் வாசித்திருந்தால் அவர்களைப் போலவே நானும் அறிவில்லாத வனாயிருப்டிேன்.

-ஹாப்ஸ்

அறிவாளி தன்னை மட்டும் உடையவனாயிருந்தால் போதும், அவன் ஒருபொழுதும் எதையும் இழப்பதில்லை.

-மான்டெய்ன்

தெரியாது என்று உணர்வது அறிவை அடைவதற்குப் பெரிய வழி.

-டிஸ்ரேலி

கற்றதை எல்லாம் முழுதும் மறக்க முடிந்த பொழுதே நாம் உண்மையில் அறிய ஆரம்பிக்கிறோம்.

-தோரோ