பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

61


அறிந்தவன் தான் கூறுவது பிறர் அறிந்திருக்க முடியாது என்று நினைப்பதில்லை.

-லா புரூயர்

குறைந்தபட்சத் தீமையும், கூடிய பட்ச நன்மையும் விளையும்படி வாழ்வதே உலகில் தலை சிறந்த ஞானமாகும்.

-ரொமெய்ன் ரோலண்டு

குறுகிய புத்தியுள்ள மனிதர் குறுகிய கழுத்துள்ள பாட்டில்களை ஒப்பர். அகத்தில் அற்பமாயிருந்தால் புறத்தில் ஊற்றும்பொழுது அதிகச் சப்தம் செய்யும்.

-ஸ்விப்ட்

தீயவன் ஒருநாளும் மெய்யறிவு பெற்றதில்லை. ஆம், ஒருநாளும் மெய்யறிவு பெற்றதில்லை. இது முக்காலும் உண்மை.

-போப்

அறியாமை ஆண்டவன் சாபம், அறிவு தேவர் உலகத்திற்குக் கொண்டு செல்லும் சிறகு.

-ஷேக்ஸ்பியர்

'அறியாமை'யால் நமக்குச் செளகரியங்கள் கிடையாமல்போகும் என்பது மட்டுமன்று-நமது கேட்டிற்கு நம்மையே வேலை செய்யத் துண்டுவதும் அதுவே. அது அறிவு 'இன்மை' என்பது மட்டும் அன்று-சதா காலமும் துன்பம் தந்துகொண்டிருக்கும் தவறுகளின் 'நிறைவு'ம் ஆகும்.

-ஸாமுவேல் பெய்லி

பார்க்க மாட்டோம் என்று சாதிக்கும் அளவுக்குக் குருடாயுள்ளவர் உலகில் கிடையார்.

-ஸ்விப்ட்

ஒருவனுக்கு அறிவிருந்தும் ஆற்றல் இல்லையாகில் அவன் வாழ்வு பாழே.

-ஷாம்பர்ட்