பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

உலக அறிஞர்களின்


அனுதாபம் காட்டுமளவே அறநெறியில் முன்னேறுவதாகக் கூற முடியும்.

-ஜார்ஜ் எலியட்

துன்புறுவோர் அனைவரும் சகோதரர். துன்பம் துடைப்போனும் சகோதரனே. அவன் ஒருவன் கிடைத்து விட்டால் அந்த இன்பத்துக்கு இணையேது?

-பர்ன்ஸ்

பிறரிடம் துக்கத்தைச் சொன்னால் அவர் அதைக் கேட்டு இறுதியில் பெருமூச்சு விடுவரேல் அப்பொழுது துக்கம் ஆறும் என்பதில் ஐயமில்லை.

-டானியல்

அனுதாபத்தோடு பார்த்தால் தெளிவு ஏற்படாமல் போனாலும் போகலாம். அனுதாபம் இல்லாவிட்டாலோ ஒன்றுமே தெரியாமல் போய்விடும்.

-இஸிடோர்

★ ★ ★


27. கொள்கை நம்பிக்கை

கொள்கையில் பரிபூரணமான நம்பிக்கை வேண்டியது தான். ஆனால் அது குருட்டுத்தனமானதாய் இருந்து விடக்கூடாது.

-ஆவ்பரி

காதால் உபதேசம் கேட்பினும் கருத்தில் நம்பிக்கை உண்டாகாவிடில் கடுகளவு நன்மையும் ஏற்படாது.

-கதே

ஒருவன் அநேக விஷயங்களில் வைதீகமாயிருக்க வேண்டும். இல்லையெனில் அவனுக்குத் தன் சொந்த அவைதீகக் கொள்கையைப் போதிக்க ஒருபொழுதும் நேரமிராது.

-செஸ்டர்டன்