பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

உலக அறிஞர்களின்



ஆனால், கி.பி.1564-ஆம் ஆண்டில் தோன்றி 1616 - ஆம் ஆண்டில் மறைந்த உலகம் புகழும் பிரபல நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியர் என்ற மாபெரும் கவிஞர், "மாறுதல் கண்ட உடன் மாறிடும் அன்பு உண்மையிலேயே அன்பாகாது" என்று அழுத்தமாக உலகுக்கு அறிவிக்கிறார்.

ஆனால், அறிவியல் தத்துவங்களின் தந்தையான ஆங்கில எழுத்தாளர் பேக்கன் என்பவர், கி.பி.1561-ஆம் ஆண்டில் பிறந்து கி.பி. 1616-ஆம் ஆண்டில் மறைந்தவரான அவர், அன்பு பற்றி என்ன சொல்கிறார்? “அன்பை ஆன்மாவின் பெருந்தன்மை என்கிறார். அந்த பெருந்தன்மையை நாம் என்னென்ன வேளைகளில் எத்தனை முறை எதிரொலிக்கின்றோம் என்ற அளவைப் பொறுத்து உணர்ச்சியின் பெருக்கம் தான் அன்பு" என்கிறார்.

அன்பு பற்றி அடிக்கடி பேசும் சிறந்த ஆங்கில இலக்கிய வித்தகரான ரஸ்கின் ஓரிடத்தில், அன்பும், நம்பிக்கையுமே ஓர் ஆன்மாவுக்குரிய தாய்ப்பால் என்கிறார்! புட்டிப் பால் அன்பை அவர் ஓர் அன்பின் அணு அளவாகக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அன்பும், நம்பிக்கையும் பெற்றிராவிட்டால் அவனது ஆற்றல் அனைத்துமே கூட அழிந்து போய்விடலாம்" என்று கூறுகிறார்.

சிறந்த ஆங்கில கலை விமர்சகராக விளங்கிய இதே ரஸ்கின் என்ற மேதை கி.பி.1819-ஆம் ஆண்டு தோன்றி கி.பி. 1900-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 81 ஆண்டுகள் வாழ்ந்த இந்த இங்கிலாந்து நாட்டுக் கலை, இலக்கிய ஞானியான இவர், அன்பு பற்றி மற்றோரிடத்தில் குறிப்பிடும்போது, 'அன்பு முக்கியமாக வளர்வது ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் ஈகை என்ற தத்துவ உணர்விலேதான்' என்கிறார்.