பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

101


நகையாடுபவன் அநேகமாக எல்லாவற்றையும் நகையாடற்குரிய விஷயமாகக் கருதுவான். ஆனால் அறிஞனோ எதையும் அவ்விதம் கருத மாட்டான்.

-கதே

நகைக்கப்படக் கூடிய குறை எதுவுமில்லாதவன் அன்பு செய்யப்படக் கூடியவனாகான்.

-ஹேர்

அதிகமாக நகையாதே. ரஸிகன் மிகவும் குறைவாகவே நகைப்பான்.

-ஹெர்பர்ட்

★ ★ ★


38. நாகரிகம்

ஒரு தேசத்தின் நாகரிகத்தை அளக்குங்கோல் அதன் ஜனத்தொகையோ நகரங்களின் விசாலமோ செல்வத்தின் மிகுதியோ அன்று. அதில் பிறக்கும் மனிதரின் குணமேயாகும்.

- எமர்ஸன்

நாகரிகம் உடையவர் யார்? தமக்கு உடை செய்யவும் வயிறு நிரப்பவும் உடலை அலங்கரிக்கவும் அடிமைகள் உடையார் நாகரிகம் இல்லாதவர். தம் அத்யாவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யமட்டும் சேவகர் வைத்துக் கொண்டு அவர்க்கும் சுகவாழ்வு அளிப்பவரே நாகரிகம் உடையவர்.

-ரஸ்கின்

நம்மிடையிலும் இன்னும் நாகரிக தசையடையாத காட்டுமிராண்டிகள் பலர் இருக்கவே செய்கின்றனர்.

-ஹாவ்லக் எல்லிஸ்