இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
104 ::: உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் இரக்கம் இரக்கத்தின் பனித்துளி கண்ணிர். அ பைரன்
- மனிதன் கருணையைக் கைவிட்டாலும், கடவுள் ஒருகாலும் கைவிடுவதில்லை. அ கெளப்பர்
- இரக்கம் கொள்வது நம்மைத் தேவர்களுக்கு நிகராகச்
செய்யும்.
- நற்பண்புகள் என்ற நட்சத்திரங்களிடையே இரக்கம் சந்திரனைப் போன்றது. க சேப்பின்
- கடவுளுடைய சக்திகள் யாவும் ஒன்றுபோல் சமமாக இருந்த போதிலும், அவருடைய நீதியைப் பார்க்கினும் இரக்கம் அதிகப் பிரகாசமாக விளங்குகின்றது. அ செர்வான்டிஸ்
× மக்கள் இறைவனிடம் இரக்கம் பெற நாம் அனுப்பி விடுகிறோமே அன்றி. நாமாக இரக்கம் காட்டுவதில்லை. அ ஜியார்ஜ் எலியட் இரட்டுற மொழிதல் 女 女 சயித்தான் உண்மையைப் போலக் காட்டி இருபொருளில் பொய் பேசுவதை நான் நம்புவதில்லை. அ ஷேக்ஸ்பியர் திடீரெனச் சொல்லும் பொய் உண்மையை வதைக்கும்: ஆனால், கவனமாகச் சிந்தனை செய்து இருபொருளில் பேசுவது உண்மையை வேண்டுமென்று. முன்யோசனை செய்து கொலை செய்வதாகும். அ மார்லி நீ பேசும்படி நேர்ந்தால், உண்மையே பேசு, ஏனெனில். இரட்டுற மொழிதல் பொய் கூறுவதற்குரிய பாதி வழியாகும். பொய்யோ நரகப் பாதை.