உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ, ζητωθωήνου/τιδ' * 105 நேரடியாகக் கூறும் பொய்யைப் போல மறைமுகமாகக் கூறும் பொய்யும் தீமையே விளைக்கும். அது அதிக இழிவானதாயும். கோழைத்தனமுள்ளதாயும் இருக்கும். இராஜ்யம் எந்த ராஜ்யத்திலே தீயோர் ஆதிக்கம் பெறாமல், நல்லோர் தலைமையில் உளரோ, அந்த ராஜ்யம் நன்கு அமைந்ததாகும். அ பிட்டாகஸ் சுதந்தரமான நாட்டில் கஷ்டம் குறைவு. ஆனால், சத்தம் அதிகமாயிருக்கும். எதேச்சாதிகாரமுள்ள ராஜ்யத்தில் கஷ்டம் அதிகமாயிருக்கும். குற்றம் சொல்வது குறைவாயிருக்கும். அ கருவோட் இலக்கியம் ஒரு சமுதாயத்தின் இலக்கியம் அதன் தேசியப் பான்மையி லிருந்து தோன்ற வேண்டும். தேசியப் பான்மை தன்மான உணர்ச்சியில்லாமல் ஏற்பட முடியாது. தன்மானம் சுதந்தர மில்லாமல் தோன்ற முடியாது. அ திருமதி ஸ்டோ செய்த வேலையின் நன்மையை அளந்த பார்த்துக் கூலி கொடுக்கப்பெறாத ஒரு தொழில் இலக்கியந்தான். அ ஃபுளுட் இலக்கியம் வாழ்க்கையின் முழு வேலையாக அமைந்தால் அது ஊழிய வேலையாகவே இருக்கும். குறித்த நேரங்களில் மட்டும் நாம் அதில் ஈடுபட்டால், அது நேர்த்தியான ஓய்வளிப்பதாயிருக்கும். அ ரோஜர்ஸ் நூல்கள் அவைகளின் ஆசிரியர்களைப்பற்றி ஒரளவுதான் தெரிவிக்கும்; ஆசிரியன் எப்பொழுதும் தன் நூலைவிட மேலானவனாகவே இருப்பான். அ போவி