106 உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் Yor = குடும்பத்தின் இலக்கியத்தைக் கட்டுப்படுத்த எனக்கு அதிகார மிருந்தால், நான் இராஜ்யத்தின் நன்மையையும் சமயத்தில் நன்மையையும் பாதுகாக்க முடியும். அ பேக்கன் விஞ்ஞானத்தில் மிகப்புதியனவாக வந்துள்ள நூல்களைப் படியுங்கள். இலக்கியத்தில் பழையவைகளைப் படியுங்கள். உயர்தர இலக்கியம் எப்பொழுதும் நவீனமாகவே இருக்கும். அ புல்வர் இலக்கியத்தின் நலிவு தேசத்தின் நலிவாகும் வீழ்ச்சியில் இரண்டும் சேர்ந்தேயிருக்கும். ക്ക് ഒരു இலக்கியம் பயில்வது இளைஞர்களுக்கு வளர்ச்சியளிக்கும். முதுமைப் பருவத்தில் விருந்தாக விளங்கும் செழுமையை அலங்கரிக்கும்; வறுமையில் ஆறுதலளிக்கும். வீட்டில் இன்பமளிக்கும் வெளியில் எங்கே செல்லவும் உரிமை அளிக்கும். ச விஸ்ரோ
- இன்று. இலக்கியத்தில் ஏராளமான கொற்றர்கள் இருக் கின்றனர். ஆனால், கைதேர்ந்த சிற்பிகள்தாம் குறைவா யுள்ளனர். . ஜோபெர்ட்
- நீ படைக்கும் இலக்கியப் படைப்புகளை ஒன்பது ஆண்டுகளாவது மக்களிடம் வெளியிடாமல் மறைத்து வைத்திரு. அ ஹொரேஸ்
- பேச்சை நித்தியமாக்கி வைப்பது இலக்கியம். அ ஷிலிகெல்
இலட்சியங்கள்
- அடிவானத்தை நோக்கிச் செல்லும் பொழுது, அது பின்னால்
நகர்ந்து சென்றுகொண்டேயிருக்கும். அது போல், மனிதனின் இலட்சியமும், அவன் அதை நோக்கி முன்னேறும் பொழுது தான் பின்னால் நகர்ந்துகொண்டேயிருக்கும். அ ஷெட்