பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ, παωρωήνολιτιβ' to 107 உயர்ந்த நோக்கங்கள் உயர்ந்த உள்ளங்களை அமைக்கின்றன. . எம்மாள் எங் பனிக்கட்டியில் சிலைகள் செய்து. அவை கரைந்து போவதைக் கண்டு நாம் கண்ணிர் பெருக்குகின்றோம். வால்டர் காட் உயர்ந்த இலட்சியங்களைக் கொண்ட வாழ்க்கைகளே தலை சிறந்த பெருமையுள்ள வாழ்க்கைகள். ா அப்பெரான் இலட்சியங்களே உலகின் எசமானர்கள். ஆ. வாலண்ட் இல்லம் அரசனாயினும் குடியானவனாயினும், தன் வீட்டில் அமைதியைக் காண்பவனே தலைசிறந்த மகிழ்ச்சியுள்ளவன். ச. கதே நூறு பேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால், ஓர் இல்லத்தை இல்லமாக்க ஒரு ஸ்திரீ வேண்டும். சீனப் பழமொழி வீடுதான் அன்பு, மகிழ்ச்சி, அமைதி. செழிப்பு ஆகியவற்றின் இருப்பிடம் அங்கேதான் தாங்கள் உதவி புரிந்தும், உதவிகளைப் பெற்றும். சிறந்த நண்பர்களும். நெருங்கிய உறவினர்களும் கூடி இன்புறுகின்றனர். . தாம்ஸன் மற்ற ஸ்தாபனங்களுக்கெல்லாம் வளர்ப்புப் பண்ணை வீடுதான். ச சேப்பின் நம்முடைய குற்றவாளிகளுள் நூற்றுக்கு எண்பது பேர் அனுதாபமில்லாத வீடுகளிலிருந்து வந்தவர்கள். அ ஹான்ஸ் கிறின்டின் ஆண்டர்ஸஸ் எவ்வளவு சிறிதாயிருந்தாலும், வீட்டுக்கு நிகரானது வேறில்லை. அ பேய்ன் வீடுதான் ஓர் இராஜ்யத்தை அமைக்கின்றது. ஜோஸப் குக்