இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
108 -$: உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் இழிதொழில்
- இழிவான தொழில் ஒவ்வொன்றும் ஒருவனை அதிலே கூர்மையுள்ளவனாகச் செய்யும். ஆனால், மற்றவைகளி
லெல்லாம் அவனுடைய அறிவை மழுக்கிவிடும். அ எலர் பி. லிட்னி
- கடலில் ஒருவன் ஓரளவு ஆழத்திற்குக் கீழே செல்லாதபடி இயற்கையின் விதி தடுத்துவிடுகின்றது. ஆனால், இழிவாகிய கடலில் நாம் ஆழ்ந்து செல்லச் செல்ல, மேலும் மூழ்குவது எளிதாயிருக்கும். அ ஜே. ஆர். லோவெல்,
இழிந்த மனப்பான்மை
- மேலான மனிதர்கள் சில சமயங்களில் நேர்மையற்றவராக இருக்கலாம்; ஆனால், இழிவான மனப்பான்மையுள்ளவன்
அதே சமயத்தில் நேர்மையானவனாகவும் இருப்பதில்லை. அ கன்ஃபூவியஸ்
- இளமையில் இழிவானவனாக இருப்பவன் வயது வந்தபின் போக்கிரியாக மாறக்கூடும்; இழிவு அக்கிரமம் செய்ய ஆசையுண்டாக்கும். அ வி. செர்புலியெஸ் * இழிவான, அற்ப விஷயங்களில் ஈடுபடுவது மனம் பலவீனமாயிருப்பதைக் காட்டும் அல்லது பலவீனப்படுத்தும்.
அ கெளப்பர் இளக்காரம்
- தண்டிப்பதைவிடத் தயவு காட்டுவது அதிக வல்லமை யுள்ளது. ஆகவே, என் நடத்தையில் இளக்காரம் மிகுந்து விளங்க வேண்டும் என்பதே என் விருப்பம். அ வாஷிங்டன்