பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி ::: 111 வாழ்வின் நற்பொருள்கள் தனித்தனியாகக் கிடைப்பதில்லை. அவை கலவைகளாகவே வரும்: பள்ளி மாணவனுடைய விடுமுறையில் அவன் செய்து முடிக்க வேண்டிய வீட்டு வேலையும் சேர்ந்துதான் இருக்கும். அது போன்றவையே எல்லா நற்பொருள்களும். சு சார் பாடப் நல்ல செயல்களுக்கு உரிய அருட்பயன்கள் காத்திருக் கின்றன. சிறிது தாமதமாக வந்த போதிலும். அவை வந்தே தீரும். مام .www.r,M|/f،II( ஆண்டவன் அன்புக்கு உரியவர்கள் ஏழைகளைப் போன்ற பணிவு பெற்றுள்ள செல்வர்களும், செல்வர்களைப் போன்ற பெருந்தன்மையுள்ள ஏழைகளும், ~ won of இறைவன் இறைவனைப்பற்றி நாம் விளக்குவதற்காகச் சிரமப்படாம லிருந்தால், அவரை நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம். - ஜோபெர்ட் பிரபஞ்சத்தில் கடவுள் பெற்றிருக்கும் ஸ்தானத்தையே நாம் நம் இதயங்களில் அவருக்கு அளிக்க வேண்டும். கடவுள் ஒரு சக்கர வளையம், அந்த வளையத்தின் மையப் புள்ளி எல்லா இடங்களிலும் இருக்கும். அதன் பரிதி எங்குமில்லை. - பபி டா எார். இறைவனைப்பற்றி அவனுக்குப் பெருமையாயில்லாத ஓர் அபிப்பிராயம் கொள்வதைவிட, அவனைப்பற்றி அபிப் பிராயமே கொள்ளாதிருத்தல் மேலாகும்; ஏனெனில், பிந்தியது வெறும் நம்பிக்கைக் குறைவை மட்டும் காட்டும் முந்தியது அவதூறாகும். அ புளுடார்க்