பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி tł: 119 உணர்ச்சி மிகுதியால் துயரம் ஏற்படுகின்றது. உணர்ச்சிக் குறைவால் குற்றத்திற்கு வழி பிறக்கும். டாலிரான்ட் சிரிப்பும் கண்ணிரும் உணர்ச்சி என்னும் ஒரே இயந்திரத்தை ஒட்டுகின்றன. ஒன்று. காற்றின் வலிமையாலும், மற்றது தண்ணீரின் வலிமையாலும் ஒட்டுகின்றன. அவ்வளவுதான். அ ஹோம்ஸ் உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் அவர்களுக்கு எல்லாம் தலைகீழாகவே தெரியும். அ பிளேட்டோ மனிதர்கள் உணர்ச்சிகளைத் தாங்கள் பயன்படுத்திக் கொள்வதைவிட்டு, தங்களை உணர்ச்சிகள் பயன்படுத்திக் கொள்ளும்படி வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். அ ஸ்டீல் உணர்ச்சிகள் நம்மை உணரச்செய்கின்றன. ஆனால், தெளிவாகப் பார்க்கும்படி செய்வதில்லை. அ மான்டெஸ்கியு அடிமைகளுள் மட்டமானவன் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டவன். அ புருக் சில சமயங்களில் நமக்குப் பதிலாக நம் உணர்ச்சிகளே பேசுகின்றன. முடிவு செய்கின்றன. நாம் அருகில் நின்று வியந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அ ஜார்ஜ் எலியட் உணர்ச்சிகள் அடங்காத கால்நடைகள். ஆதலால், அவை களைக் கட்டியே வைக்க வேண்டும். நமது சமயம், அறிவு. முன் கவனம் ஆகியவைகளால் நாம் அவைகளை ஆண்டு அடக்கி வரவுேண்டும். உணர்ச்சி என்பது உள்ளத்தின் குடிவெறி, அ ஸெளத்