பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ. 7/τωρωή"φυσιδ' 中 121 உணவு வகைகள் சுவையுள்ள முறையில் மக்கள் சமைக்கத் தெரிந்திருப்பதால், இயற்கையான தேவைக்கு மேல் அவர்கள் இருமடங்கு அதிகமாக உண்கின்றனர். அ ஃபிராங்லின் சாதாரண எளிய உணவுதான் தலைசிறந்தது. அதிக உணவு வகைகள் அதிக நோய்களைக் கொண்டுவருகின்றன.

ைபிளினி

சிங்கத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு போதும், மனிதனுக்கும் அந்த அளவே போதும். அ ஜி. ஃபார்டைஸ் உடலைத் திடமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் உபவாசத்தையும். நடையையும் மேற்கொள்ளவும்: ஆன் மாவைத் திடமாக வைத்துக்கொள்ள உபவாசத்தையும் பிரார்த்தனையையும் மேற்கொள்ளவும். நடை உடலுக்குப் பயிற்சியளிக்கும். பிரார்த்தனை. ஆன்மாவுக்குப் பழிற்சி யளிக்கும்; உபவாசம். இரண்டையும் சுத்தமாக்கும். அ குவார்லேஸ் மருந்தைவிட உணவு வகை மேலானது. ஒவ்வொருவனும் தானே தனக்கு மருத்துவனாயிருக்க வேண்டும். இயற்கைக்கு நாம் உதவியாக இருக்க வேண்டுமேயன்றி அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது. உன் உடலுக்கு எது ஒத்து வருகிறது என்று அனுபவத்தில் தெரிந்துள்ளாயோ அதை அளவோடு உண்ண வேண்டும். நம் உடல் சீரணித்துக் கொள்ளக் கூடியதைத் தவிர வேறு எதுவும் நல்லதன்று. ஜீரண சக்தி அளிப்பது எது? உடற்பயிற்சி. உடலுக்கு வலிமையளிப்பது எது? உறக்கம். தீராத தீமைகளையும் குறைப்பது எது? பொறுமை. அ வால்டேர்