பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி ::: m 123 கீழே கிடப்பவனை மேலே தூக்கிவிட்டால் போதாது. பின்னும் அவனுக்கு உதவி செய்ய வேண்டும். அ ஷேக்ஸ்பியர் உபதேசம் உன் உபதேசத்தைக் கேட்டவர்கள் ஆன்மிக வளர்ச்சியில் ஆசை கொண்டு விளங்கும்படி செய்ய வேண்டும் இல்லா விடில் உன் உபதேசம் வீணானது. அ கோல்பர்ன் உபதேசியாரின் அறிவுத்திறனைக்காட்டிலும் அவருடைய ஆழ்ந்த நம்பிக்கையே கேட்பவர்களின் இதயங்களில் பதிகின்றது. உயிர்தான் உயிரை அளிக்க வல்லது. ராபர்ட்லைன் உபதேசம் செய்பவர் படிப்பில்லாதவர்களுக்கு எளிய முறையிலும், தெளிவாகவும். பூரணமாகவும் கற்பிக்கக்கூடிய ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், ஊக்கப் படுத்துவதைவிட அடிப்படையான விஷயங்களைக் கற்பிப்பது அவசியம. அ லூதர் உபதேசம் செய்வதற்கு உயிர்த்துடிப்புள்ள ஒரு மனிதன் போதும், பேரறிவு தேவையில்லை. ைஏ. ஃபெல்ஸ் உலகின் தேவை நல்ல முறையில் உபதேசம் செய்வதன்று: ஆனால், நல்ல முறையில் கேட்பதுதான். அ போர்ட்மன் உயிர்த் தியாகிகள் உண்மைக்காக உயிரைத் தியாகம் செய்தல் ஒருவர் தம் சமயத்திற்காகவோ, நாட்டிற்காகவோ மரிப்பதன்று உலகத் திற்காக மரிப்பதாகும்.