பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

== உயிரை விடும் தியாகியைவிட உயிர்த் தியாகியாக வாழ்வது அதிகக் கஷ்டம், அதற்கு அதிக வல்லமை தேவை. அ ஹொரேஸ்மான் உலகின் இயல்பு. இறந்துபோன திருத்தொண்டர்களைப் புகழ்தலும், உயிரோடிருப்பவர்களைத் துன்புறுத்தலும். அ என். ஹேர் உயிர்த் தியாகிகளைப்பற்றிப் படிக்கும் பொழுது. நாமும் தியாகிகளாகிவிடலாம் என்று தோன்றுகிறது. ஆனால், செயலில் இறங்கும்பொழுது, ஒரு கடுஞ்சொல்லைக்கூட நம்மால் தாங்க முடிவதில்லை. அ ஹன்னா மூர் உயில் × உன் மரண காலத்தில் நீ விட்டுச்செல்வது தகராறுக்கு இடமில்லாததாய் இருக்கட்டும். இல்லையெனில், உன் சொத்துகளுக்கு வக்கீல்களே உன் வாரிசுகளாக விளங்குவார்கள். அ எப். ஆஸ்போரின் சாகும்வரை இருப்பதைப் பங்கிட்டு அளிக்காதவர்கள், முடிந்தால் மேலும் அதை வைத்துக்கொண்டிருக்க எண்ணு வார்கள் என்று தெரிகின்றது. அ பிஷப் ஹால் உன் வாழ்க்கையில் எனக்கு ஒன்றும் அளிக்காமல், உன் மரணத்திற்குப் பின் எனக்கு அளிப்பதாக உறுதி சொல்கிறாய். அப்படியானால் நான் எதை விரும்புவேன் என்பதை உனக்கு அறிவிருந்தால் நீ தெரிந்துகொள்வாய். அ மார்ஷியல் உயிரோடிருக்கையில் எதையும் கொடாமல், இறந்த பிறகு தர்மங்கள் செய்ய ஏற்பாடு செய்வது வடிகட்டிய சுயநலமாகும். அ கோல்டன்