பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்





A கவலையோ, பயமோ இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதில் மிகுந்த அழகு இருக்கின்றது. நம்முடைய அச்சங்களில் பாதி ஆதாரமற்றவை மறுபாதி நம்பத்தகாதவை. அ போவி А ஒருவன் எந்த மனிதனுக்கு அஞ்சுகிறானோ அவனை நேசிப்பதில்லை. க. அரிஸ்டாட்டல்

  • ஒழுக்கத்தில், எது 'அச்சத்தில் தொடங்குகின்றதோ, அது அயோக்கியதையில் முடிகின்றது: மதத்தில், அச்சத்தில் தொடங்குவது வழக்கமாக வெறியிலே போய் முடிகின்றது. அச்சத்தை ஒரு தத்துவமாகவோ, துண்டுதலாகவோ கொண்டால், அதுவே எல்லாத் தீமைகளுக்கும் ஆரம்பமாகும். அ. திருமதி. ஜேம்ஸன்
  • ஒருவன் கொண்டுள்ள நன்னம்பிக்கை காரணமாக ஏற்படும் அச்சம் நேர்மையானது ஐயத்தினாலும் அவநம்பிக்கை யினாலும் ஏற்படும் அச்சம் தீமையானது. முதலாவது அச்சம் கடவுளை நம்பி நன்மையைப் பெறலாம் என்ற நம்பிக்கை யளிப்பது. பிந்திய அச்சம் கடவுளிடம் நம்பிக்கையில்லாத ஏக்கத்தை உண்டாக்குவது முதல் கூட்டத்தார் இறைவனை, இழந்துவிடக்கூடாதே என்று அஞ்சுகின்றனர். இரண்டாவது கூட்டத்தார் இறைவனைக் கண்டுகொள்ளக்கூடாதே என்று அஞ்சுகின்றனர். - பானங்கல்
  • தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும். அ. திருவள்ளுவர் * அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். க. திருவள்ளுவர் அடக்கமும் பணிவும்

  • அடக்கம் என்ற பொன்னில் பதித்த அறிவு இருமடங்கு ஒளியுடன் பிரகாசிக்கும். திறமையோடு அடக்கத்தையும்