ப. ராமஸ்வாமி ** 133
ஊதாரியாயிருப்பவன் விரைவிலே ஏழையாவான். வறுமை யால் அவன் பிறரை அண்டி வாழ நேரும், அவனிடம் ஊழல் களும் மலிந்துவிடும். அ. ஜான்ஸன்
செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குதலே அதிகச் செலவும். ஊதாரித்தனமுமாகும். அ தியோஃப்ரேஸ்டஸ்
எங்கும் நிறைந்தவர்
ஒருவர் உள்ள இடத்தில் கடவுள் இரண்டாமவராக உள்ளார்: இருவர் உள்ள இடத்தில், கடவுள் மூன்றாமவராக உள்ளார். அ முகம்மது நபி
மானிட சமூகத்தை ஒரு குடும்பமாக அமைத்து, தாம் தந்தையாயிருந்து. உலகை நம் வீடாக்கிய கடவுள் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார். அ காலெரிட்ஜ்
எதிர்காலம்
நாம் எப்பொழுதும் எதிர்காலத்தையே நோக்கிக்கொண்டிருக் கிறோம்; நிகழ்காலம் நமக்குத் திருப்தியளிக்கவில்லை. நமது இலட்சியம் எதுவாயிருப்பினும், எதிர்காலத்திலேயுள்ளது.
அ. கில்லெட்
இளைஞர்களுக்கு எதிர்காலம் ஒரு தேவதை உலகமாக உள்ளது. * стултетот
நாளை என்ற ஒவ்வொரு நாளைக்கும் இரண்டு கைப்பிடிகள் உள்ளன. கவலை என்ற பிடியினாலோ. நம்பிக்கை என்ற
பிடியினாலோ நாம் அதைப் பிடித்துக்கொள்ளலாம்
எதிர்காலமே நமது குறிக்கோள். நாம் ஒரு போதும் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. வாழப்போவதாக நம்பிக்கொண்டு
பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/134
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
