பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி * 141

எந்த மனிதனும் தன் தீமைகளை முன் ஒப்புக் கொள்வதில்லை. ஏனெனில், அவன் இன்னும் அவைகளில் திளைத்துக்கொண்டிருக்கிறான். விழித்தெழுபவன்தான் தன் கனவைப்பற்றிப் பேச முடியும். s அ லெளிகா ஒருவன் தான் தவறு செய்ததை ஒப்புக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு பெற்றிருக்கிறான் என்பதே. அ போப் நம்முடைய தவறான செயல்களை ஒப்புக்கொள்ளத் தைரியம் அவசியமில்லை. பரிகசிக்கத் தகுந்த மடமையான காரியங் களுக்கே அது அவசியம். அ ரூஸோ ஒழுக்கம் ஒழுக்கம் என்பது சமயம் செயற்படுதலாகும்; சமயம் என்பது ஒழுக்கத்தின் தத்துவம். அ வார்ட்லா சிலர் சமயத்திலிருந்து ஒழுக்கத்தைப் பிரிப்பர். ஆனால், சமயமே வேர். அது இல்லாமல் ஒழுக்கம் வாடி அழிந்து விடும். அ எலி.ஏ. பார்ட்டல் சமயக் கட்சிகள் பலதிறப்பட்டவை. ஏனெனில். அவை மனிதர்களிடமிருந்து தோன்றியவை ஒழுக்க நெறி எங்கும் ஒரே தன்மையுள்ளது. ஏனெனில். அது ஆண்டவனிடமிருந்து வந்தது. * . அ வால்டேர் ஒழுக்கமில்லாமல் சமயமில்லை. சமயமில்லாமல் ஒழுக்க மில்லை. - அ. ஜி. ஸ்பிரிங் ஒழுக்க வரம்பின்மை தீய கருத்துகள் தீய உணர்ச்சிகளை எழுப்புகின்றன. தூய்மையற்ற பேச்சுகளுக்கு இடமுண்டாக்குகின்றன: தீய