பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 :: உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் --

  • வெளியே ஞானியார், வீட்டிலே சயித்தான். அ பனியன்
  • கடவுளைத் தவிர வேறு எவரும் காணமுடியாதபடி உலவும் தீமை பாசாங்கு ஒன்றுதான். அ மில்டன்
  • ஒருவன் (முகமலர்ந்து சிரித்துக்கொண்டேயிருக்கலாம் அந்நிலையில் துரோகியாகவும் இருக்கலாம். அ ஷேக்ஸ்பிய
  • கோயிலில் எண்ணற்ற பாசாங்குக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக நீ போகாமல் இருக்கவேண்டாம், கூட ஒருவருக்கு அங்கே எப்பொழுதும் இடமுண்டு.

அ ஏ. ஆர். ஆடம்ஸ்

  • தீங்சே எண்ணாத உள்ளமுடையார்க்குத் தலையணை வேதனையளிப்பதில்லை. அ கெளப்பர்
  • அகத்தில் பரிசுத்தமாயிருப்பவர்களைப் புறத்தில் அதுவே பித்தளைச் சுவராக நின்று காக்கும். அ ஹொஸ்ரே

கருத்துகள்

  • கருத்துகளே உலகை ஆட்சி செய்கின்றன. அ. கார்ஃபீல்ட்
  • இந்தக் காலத்தில் நாம் கருத்துகளுக்காகப் போராடுகிறோம். பத்திரிகைகள் நம் கோட்டைகளாக உள்ளன. அ ஹீய்ன்
  • கருத்துகள் தாடிகள் வளர்வது) போன்றது. வளர்ந்து பருவமடையும்வரை மனிதர்களுக்கு அவை முளைக்க

மாட்டா. அ வால்டேர்

  • கருத்துகள் நாகரிகத்தை மேல்நிலைக்கு உயர்த்துபவை. அவை புரட்சிகளைத் தோற்றுவிக்கின்றன. ஒரு கருத்தில் அநேக வெடி குண்டுகளைக்காட்டிலும் அதிகமான வெடி மருந்து அடங்கியுள்ளது