பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ս. 77աavaւյaւի՝ * 161 = எல்லோருக்கும் சமமான நீதி: எல்லா நாடுகளுடனும் அமைதியாக நடந்து. வாணிபம் செய்து நேர்மையாக நட்புறவு கொள்ளல் எவருக்கும் கட்டுப்படும் ஒப்பந்தங்கள் இல்லாமை: மாகாண இராஜ்யங்களின் உரிமைகள் அனைத்தையும் ஆதரித்தல் - இவையெல்லாம் நம் குடியரசுக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கக்கூடியவை. அ ஜெஃபர்ஸன் குடும்பம் குடும்பங்கள் எப்படியோ அப்படியே சமூகம். அ தேயர் இன்பமான குடும்பம் முன்கூட்டியே காணும் சுவர்க்கமாகும். அ பெளரிங் ஸ்திரீதான் குடும்பத்தின் கதிமோட்சம் அல்லது அழிவுக்குக் காரணமாவாள். அ ஏமியெல் குணம் அறிவைத் தனிமையாயிருந்து பெருக்கிக்கொள்ளலாம்: ஆனால், குணம் அலைகள் வீசும் உலகத்தின் சந்தடியி லிருந்துதான் அமைய வேண்டும். அ கதே வாழ்க்கையில் நம் குணத்தின் மூலம் பெற்றுள்ளதே கடைசியில் நம்முடன் வரக்கூடியது. அ ஹம்போல்ட் மனிதர்கள் சாதாரணச் சிறு விஷயங்களில் தங்கள் குணங்களைக் காட்டிவிடுகின்றனர். அப்பொழுது அவர்கள் எச்சரிக்கையாயிருப்பதில்லை. அற்ப விஷயங்களிலும் மனிதனின் எல்லையற்ற சுயநலத்தைக் காண்கிறோம். அவன் மற்றவர்களின் உணர்ச்சியை மதிப்பதில்லை. தனக்கு எதையும் வேண்டாமென்று ஒதுக்குவதுமில்லை. அ ஷோப்பனார் உ. அ. - 11