பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/173

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

Yor சட்ட நடவடிக்கையில், செலவைத் தவிர மற்றது எதுவும் நிச்சயமில்லை. உ எஸ். பட்லர் பூனைக்காகப் பசுவை இழப்பது போன்றது வழக்காடல். அ. சீனப் பழமொழி சட்டம் ஓர் எலிப்பொறி உள்ளே செல்வது எளிது; ஆனால், வெளியே வருவது கஷ்டம் க. பால்ஃபோர் சட்டத்தையும் மருந்தையும் அவசியம் ஏற்பட்டால்தான் உபயோகிக்க வேண்டும் இல்லாவிடில், உடல்கள் மெலிந்து போகும். பைகள் காலியாகிவிடும். அ குவார்லெஸ் சட்டங்கள் சிலந்திவலைகள் போன்றவை. அவைகளில் சிறு ஈக்கள் சிக்கிக்கொள்ளும். ஆனால், குளவிகளும் வண்டுகளும் வலைகளை அறுத்துக்கொண்டு ஓடிவிடும். அ ஸ்விஃப்ட் ஆங்கிலேயரின் சட்டங்கள் குற்றத்தைத் தண்டிக்கின்றன: சீனர்களின் சட்டங்கள் இன்னும் அதிகமாய்ச் செய்தின்றன, அவை நன்மையைப் பாராட்டிப் பரிசளிக்கின்றன. அ கோல்டுஸ்மித் சட்டப்படியுள்ள ஏழை மனிதனின் உரிமையைப் போல, வலையில் தொங்கும் மீன் அதை விட்டு வெளியே வருதல் அபூர்வம். அ ஷேக்ஸ்பியர் ஒழுக்கமுறைபற்றி மக்களுடைய உணர்வே சட்டமாக அமைந்துள்ளது. ைபிளாக்ஸ்டோன் நல்ல சட்டங்கள் நன்மை செய்வதை எளிதாக்குகின்றன. தவறு செய்வதைக் கடினமாக்குகின்றன. ைகிளாட்ஸ்டன் சட்டமும் ஒழுங்கும் இல்லாமல் சமுதாயம் வாழ முடியாது. தீவிரமாகச் சட்டத்தை மீறி மேற்செல்பவர்கள் இல்லாமல் சமுதாயம் முன்னேறவும் முடியாது. அ பெர்ட்ரான்ட் ரஸ்ன்பல்