பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tu. Zraunchoanzarob' :: 179 ஜனக்கும்பல் பயமில்லாதிருக்கையில் கொடுமையாகப் பாயும்: ஒரு முறை அஞ்சிவிட்டால், மிக இழிவாயும் வெறுக்கத்தக்க முறையிலும் இறங்கிவிடும். ைமேலெட் கூட்டம் தன் அபிமானத்தைக்கொண்டே சிந்தனை செய்யும். அறிவைக் கொண்டு சிந்திக்காது. அ டபுள்யு ஆர் ஆல்ஜெர் அவர்கள் சுதந்தரம் என்று கூவும் பொழுது தங்கள் இஷ்டம் போல் நடக்கும் உரிமையையே கோருகின்றனர். ைமில்டன் ஜனநாயகம் ஜனநாயகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாதது போல் தோன்றுகிறது. ஏனெனில், அது சரித்திரத்தில் மிகப் புராதனமான போக்கு. மிகவும் நிலையானது. பெரும்பாலோர் வேற்றுமையின்றி ஏற்றுக்கொள்ளக்கூடியது. டீ. டி. டாக்புவில்லி சைத்தான் முதல் ஜனநாயகவாதி. அ பைரன் அமெரிக்காவின் உண்மையான ஜனநாயகக் கருத்து என்ன வெனில், ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவரைப் போலச் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், ஒவ்வொருவரும் கடவுளால் படைக்கப்பெற்ற நிலையில் இருப்பதற்குத் தடையற்ற சுதந்தரம் இருக்கவேண்டும் என்பதே. அ பீச்சர் ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல்களுக்குரிய பிரச்சினை யன்று. ஜேவஹர்லால் நேரு பூரண அரசியல் ஜனநாயகம் என்பதன் பொருள் பொருளாதார ஜனநாயகமாக வளர்ச்சியடைதல் என்று பொதுவாகச் சொல்லி விடலாம். க ஜவஹர்லால் நேரு சாட்சியம் ஒரு கட்சியை மட்டும் கேட்டால் நீ இருளில்தான் இருப்பாய் இரு திறத்தாரையும் கேட்டால் எல்லாம் தெளிவாகிவிடும். ஹாலிபர்ட்டன்