பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ. σπιρουοναβ’ :: 183 சிரத்தை சிரத்தையுள்ள மனிதனுக்கு உபகரணங்கள் தாமாகவே அமை கின்றன. அப்படிக் கிடைக்காவிட்டால், அவனே உண்டாக்கிக் கொள்கிறான். அ. சான்னிங் பூரணமான, உற்சாகமுள்ள மனப்பூர்வமான சிரத்தைக்கு ஈடானது எதுவுமில்லை. | டிக்கன்ஸ் சிரத்தை இல்லாமல் எந்த மனிதனும் பெருமையடைவதில்லை, அல்லது பெரிய காரியங்களைச் சாதிப்பதில்லை. 1 பேய்ன் நீ செல்வனாக வேண்டுமா? நீ அரைகுறையாயில்லாமல் முழு மனத்தோடு விரும்பினால், அப்படி ஆக முடியும். ராபர்ட்லைன் சிரிப்பின்றி வினை கருதல் வினையில் கருத்துடைமை அறிவின் மேல்தோடுதான். ஆயினும் அது அறிவைப் பாதுகாத்து வைக்கின்றது. - கன்ஃபூவியஸ் சிரிப்பு சிரிப்பு ஆரோக்கியத்தை வளர்க்கத் தலைசிறந்ததாகும். அது ஜீரண சக்தியை அளிக்கின்றது. முற்காலத்தில் நம் முன்னோர்கள் விருந்துண்ணும் பொழுது. விகடகவிகளைப் பேசச்செய்து வந்ததன் காரணம் சிரிப்பினால் ஜீரண சக்தி அதிகமாகும் என்பதே. அ ஹயூஃப்லண்ட் நீ அறிவாளியாயிருந்தால் சரி. அ மார்ஷியல் ஒரு முறைகூடச் சிரிக்காமல் கழிந்த நாளே வீணாகக் கழிந்த நாளாகும். - சாம்ஃபோர்ட்