18
உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்
பலவீனமாக இருந்தால் அவர்களை அடிமைப்படுத்திக் கொடுமை செய்யக்கூடாது என்பதற்கே அது ஏற்ற காரணம் என்றும் நான் சொல்லியிருக்கிறேன். டேனியல் வெப்ஸ்டர்
அட்டவணை
★
நல்ல புத்தகத்திற்கு அகர வரிசையில் பூரணமான அட்டவணை இல்லாவிட்டால், அதன் பயனில் பாதி போய் விடுவதாக நான் கருதுகிறேன், தேவைப்படும் பொழுது அந்நூலில் அமைந்துள்ள அரிய கருத்துகளையோ உண்மைகளையோ எடுத்துக்காட்ட அட்டவணையில்லாமல்
முடியாது.
- ஹொரேஸ் பின்னி
அட்டவணையில்லாத நூல். ஊசியில்லாத திசைகாட்டும் கருவி போன்றது. அதனால் திகைப்பு அதிகமாகுமேயன்றி. திசை தெளிவாகத் தெரியாது.
அட்டவணை அவசியமான உதவி: அது இல்லாவிட்டால், ஒரு பெரிய ஆசிரியரின் நூல் உள்ளே நுழைய முடியாத காடாகவே இருக்கும். அ ஃபுல்லர்
அணிகள்
女
அணிமணிகள் எல்லாம் அற்பத்தனத்தின் அறிகுறிகளாம்
- ல வேட்டர்
கன்னிமாடப் பெண்களுக்கு அணியாவது ஒழுக்கமே தவிர உடையன்று. அ. ஜஸ்டின்
நாம் அனைவரும் ஆதியில் வனத்திலிருந்து வந்தவர்கள் பச்சை குத்திக்கொள்ளல், போருக்காக உடலில் வர்ணம் பூசிக்