பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

★ ப. ராமஸ்வாமி - 1111) தேனியைப் போல, நமது வேலையை நாம் இன்பமயமாக்கிக கொள்வோம். அ கோல்டு.in/த சுறுசுறுப்பு. கடன்களை அடைக்கும். சோம்பலும் கருத்தின்மை யும் கடன்களைப் பெருக்கும். அ ஃபிராங்க்வி. எவ்வளவு அதிகமாக நாம் வேலை செய்கின்றோமோ அவ்வளவுக்குக் கூடுதலாக வேலைசெய்ய முடியும் எவ்வளவு சுறுசுறுப்பாயிருக்கின்றோமோ, அவ்வளவு அதிகமான ஒய்விருக்கும். அ ஹாஸ்லி அறிவைப் பெருக்கிக்கொள்வதற்கு கருத்துடைமை என்ற விலையைச் செலுத்த வேண்டும். அறுவடை செய்ய வேண்டுமானால், முன்னால் விதைகளை விதைத்திருக்க வேண்டும். ைபெய்லி மனிதன் தானாக உழைத்துப் பழகிக் காய்த்துப் போயிருக்க வேண்டும். இன்ப நுகர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்திருக்கக் கூடாது. அவை உடலுக்கும் நன்மை செய்வதில்லை. மனத்தின் அறிவுக்கும் உதவுவதில்லை. அ. சாக்ரடீஸ் சூதாட்டம் சூதாடும் கருவியைக் கையிலெடுத்துக்கொண்ட கணத்தி லிருந்தே ஒரு மனிதனை. அவன் தற்கொலை செய்து கொள்பவன் என்றே நான் கருதுகிறேன்; பின்னால் நேருவ தெல்லாம் அவன் தன் நெஞ்சிலே குத்திக்கொள்ள உடைவாளைத் தீட்டுவதாகும். அ. கம்பாலந்து பகடை உருட்டும் ஓசையைக் கேட்கும் போதெல்லாம். நான் குடும்பம் முழுவதற்கும் சாவுமணி அடிக்கும் ஓசையைக் கேட்கிறேன். அ ஜெரால்டு