பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் 女 வேகமாகச் சேர்ந்த செல்வங்கள் குறைந்துவிடும் சிறிது சிறிதாகச் சேர்ந்தவை பெருகும். یی کهG:پی ஒரு மனிதன் எவ்வளவு வைத்திருக்கிறான் என்பதைக் கண்டு நாம் பொறாமைப்படுகிறோம். அவன் எவ்வளவு அனுபவிக்கிறான் என்பதைக் கண்டால், நாம் அவனுக்கு இரங்கத்தான் வேண்டும். ைஎபீட் ஒரு பணக்காரன தன் செல்வத்தால் செருக்குற்றிருக்கிறான். அவன் அந்தச் செல்வத்தை எப்படி உபயோகிக்கிறான் என்பது தெரியும்வரை. நாம் அவனைப் புகழக்கூடாது. அ. சாக்ரடிஸ் செல்வங்களில் திளைப்பவர்களுக்கு மற்றவர்களுக்கு எவ்வளவு தேவைகள் இருக்கும் என்பதைக் கண்டுகொள்வதைப் போன்ற் கஷ்டம் வேறில்லை. அ ஸ்விஃப்ட் மிகக் குறைந்ததைக்கொண்டு திருப்தியடையவனே முதன்மையான செல்வன். ஏனெனில், இயற்கையின் செல்வம் திருப்திதான். A சாக்ரடிஸ் பயனுள்ள முறையில் செல்வாக்கை உபயோகிக்க விரும்புவோன் ....த.பும் அவமரியாதை செய்யக்கூடாது. தவறானவைகளைக் கண்டு அவன் துயருறக்கூடாது. நன்மையை வளர்ப்பதில் அவன் தன் ஆற்றல்களைப் பயன்படுத்த வேண்டும். அவன் அழிவு வேலையில் இறங்காமல், ஆக்க வேலையில் (புதியன படைப்பதில் ஈடுபட வேண்டும். அவன். ஆலயங்களைக் கட்டி மனித சமூகம் அங்கே வந்து. பரிசுத்தமான இன்பத்தில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும். க. கதே வெளியே தெரியாமல் உன்னை மூடிவைக்க முடியாது: உலகமெல்லாம் பார்க்கும்படி மாபெரும் மேடைமீது நீ அமர்ந்திருக்கிறாய். உன் செயல்கள் நேர்மையாகவும் பரோபகாரமாகவும் இருந்தால், அவை உன் ஆற்றலைப் பெருக்கி. இன்பத்தையும் சேர்க்கும் - சைரஸ்