பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி

19கொள்ளல் ஆகியவைகளிலுள்ள பழைய ஆசையை நாம் அழிப்பது கஷ்டம் நம் பைகளில் பணம் வந்து சேர்ந்ததும் அது எப்படி நகைகளாக மாறி, நம்மீது தொங்கத் தொடங்கு கின்றது. நகைகளால் நம் நடத்தைகள் செம்மைப்படுவதில்லை. அ. இ.பி. விப்பிள் கூடுதலாக ஆடைகள் அணிதல். செலவு மிகுந்த ஒரு தவறு. அந்த ஆடைகளைக் குறைத்துக் கத்தரித்தால், வெட்டிய துண்டுகள், உடையில்லாமல் தவிப்பவர்களுக்கெல்லாம் உடையாகிவிடும். அ பென் வெளிப்பகட்டில் பயனில்லை; அறிவாளிகள் உண்மையான விஷயங்களைக் கொண்டு வாழ்க்கையை வகுத்துக்கொள்வர். அ பென் அதிகாரம் மனிதன், ஆணவமுள்ள மனிதன்! சொற்ப அதிகாரத்தை அணிந்துகொண்டு. அவன் இறைவனின் முன்னிலையில், கற்பனைக்கு அடங்காத தந்திரங்களை யெல்லாம் செய்கிறான். அதைக் கண்டு தேவர்களும் கண்ணிர் வடிக்கின்றனர். க. ஷேக்ஸ்பியர் அதிகாரத்தில் நிலையாக அமர்ந்துள்ள ஒருவன். முன்னேற்றத்தைவிட அதை நிலைநிறுத்திக்கொள்வதே தலைசிறந்த இராஜதந்திரம் என்று தெரிந்துகொள்கிறான். ன் லோவெல் அதிகாரத்தை அடிக்கடி பயன்படுத்துவதும், ஆராயாமல் உபயோகிப்பதும் அதிகாரத்திற்கே குழி தோண்டுவதாகும். இடைவிடாமல் இடி இடித்து வந்தால், ஏதோ ஓர் ஆலையின் ஒசையைப்போல், அதிலே பயம் தெளிந்துவிடும்.