பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

мл. илиророли? 8: 207 தற்புகழ்ச்சி ஒருவன் தன்னைப்பற்றி அதிக உயர்வாக எண்ணுவதும். அதிகத் தாழ்வாக எண்ணுவதும், இரண்டுமே தவறுதான். ச. கதே இருபது அறிஞர்களுள் ஒருவர்கூட தம்மைத் தாமே புகழ்ந்து பேச மாட்டார். ைஷேக்ஸ்பியர் ஒருவன் புகழை மற்றவர் புகழ்ந்தால் இசைபோல் இருக்கும். ஆனால், அவன் தானே புகழ்ந்துகொண்டால் கேட்க வெறுப்பாயிருக்கும். அ லென..போன் தன்னம்பிக்கை தாங்கள் வெல்லலாம் என்று நம்புகிறவர்களே வெற்றி அடைய முடியும். க வர்கில் நானே செய்துகொள்ளக்கூடிய காரியம் எதையும் நான் மற்ற எவரையும் செய்யச் சொல்லக்கூடாது என்று நான் எப்பொழுதும் நம்பி வருகிறேன். அ மாண்டெஸ்கியு எவரை வேண்டுமானாலும் ஐயுறலாம். ஆனால், உன்னை நீயே ஐயுறக்கூடாது. ன் போவி தன்னுடைய இன்பத்திற்குத் தேவையான ஒவ்வொன்றையும். மற்றவர்கள் சார்பில்லாமல் தானே அமைத்துக்கொள்ளும் மனிதன், இன்பமாக வாழ்வதற்குத் தலைசிறந்த வழியைக் கடைப் பிடிக்கிறான்.இவனே நிதானமான தேவையுள்ளவன் ஆண்மை யும் அறிவும் உள்ளவன். - 3 பிளேட்டோ