பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/221

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் நாணயம் Yor 女 நாணயம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி, அதில் மூச்சுக் காற்றுப் பட்டு, அது அழுக்கடைந்தால் துடைத்துவிடலாம். ஆனால், அது உடைந்துபோனால், அதைப் பழுது பார்க்க முடியாது. அ.வால்டர் ஸ்காட் ஒரு மனிதனின் நாணயத்தைப் பாதிக்கக்கூடிய மிகச்சிறிய விஷயங்களிலேகூடக் கவனமாயிருக்க வேண்டும். அதிகாலை ஐந்து மணிக்கும் இரவு ஒன்பது மணிக்கும் உன் சம்மட்டியின் ஒசையை உனக்குக் கடன் கொடுத்தவன் கேட்டால், அவன் உன் கடனை மேலும் ஆறு மாதத்திற்குக் கேளாமலிருப்பான். நீ வேலை செய்துகொண்டிருக்க வேண்டிய நேரத்தில், அவன் உன்னை மேடைப் பந்தாட்டத்திலே கண்டாலும், மதுக்கடையிலே உன் குரலைக் கேட்டாலும், மறு நாளே அவன் தன் கடனைக் கேட்டு ஆளனுப்புவான். அ ஃபிராங்க்லின் கடன் வாங்கியவர்களைவிடக் கடன் கொடுத்தவர்களுக்கு ஞாபகம் அதிகம். ஃபிராங்க்லின் நாத்திகம் 3'r நாத்திகம், வாழ்க்கையைக்காட்டிலும் இதயத்திலேயே உள்ளது. _ பேக்கன் நாததகம் நம்பிக்கையின் மரணம்: ஆன்மாவின் தற்கொலை, நெருக்கடியான ஆபத்துக் காலத்திலும் ஒரு தெய்விக சக்தியை ஏற்றுக்கொள்ளாத பிடிவாதமுள்ளவர் சிலரே இருப்பர். அ பிளேட்டோ நல்லொழுக்கமுள்ளவர்கள் கஷ்டமடைவதும், தீமை வெற்றி பெறுவதும் மனித சமூகத்தில் நாத்திகர்கள் பெருகக் காரணமா யுள்ளன. அ டிரைடன்