பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி : 241 மூச்சுத் திணறி இறந்து போன சக்கரவர்த்தியை உதாரணமாய்க் கூறலாம்; குளிரைக் காப்பதற்காகவே அவருக்குப் போர்வைகள் போடப்பெற்றிருந்தன; மற்ற விஷயத்தில், எதிரிகளிடம் தன் கோட்டைகளை விட்டுவிட்ட நகரத்தை உதாரணமாகக் கூறலாம். அந்நகர மக்கள் தாங்கள் தைரியத்தை மட்டுமே நம்பி யிருப்பதாகக் காட்டிக்கொள்ளவே அப்படிச் செய்தார்களாம். அ கோல்டுஸ்மித் சுதந்தரமும் நீதியும் எப்பொழுதெல்லாம் பிரிந்து செல்ல ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் இரண்டுக்கும் ஆபத்து என்பது என் அபிப்பிராயம். க. பர்க் தாமதமாக அளிக்கும் நீதி. இல்லை என்று மறுக்கப்பெற்ற நீதியாகும் அ. கிளாட்ஸ்டன் நீதி மெதுவாக அசைந்து ஆடிக்கொண்டு செல்வதால், அதன் தாமதத்தால், குற்றம் பல சமயங்களில் தப்பி ஓடிவிடுகின்றது. அதனுடைய மந்தமான, சந்தேகமான போக்கு பலரைக் கண்ணிர் பெருகும்படி செய்துவிடுகின்றது. அ கார்னிலி நீதிக்குப் பொருத்தமாயுள்ளது சட்டங்களுக்கும் பொருத்தமா யிருக்க வேண்டும். க சாக்ரம்ஸ் கடவுளுடைய திரிகை மெதுவாகத்தான் திரிக்கும். ஆனால், நிச்சயமாகத் திரிக்கும். அ ஹெர்பெர்ட் நீதியாயிருக்கக் கற்றுக்கொள்ளாத ஒரு ஜன சமூகம் எப்படிச் சுதந்தரமாயிருக்க முடியும்? அ பீயெஸ் நீதியாக மட்டும் இருப்பவன் கொடுமையானவன். எல்லோரும் நீதியான முறையில் கண்டிப்பாக நடத்தப்பட்டால், பூமியிலே எவர் வாழ முடியும்? அ பைரன் உ. அ. - 16