பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்





அதிர்ஷ்டம் மனிதர்களை மாற்றுவதில்லை. அவர்களை வெளிப்படையாகத் தெரியும்படி திறந்து காட்டுகிறது. அ ரிக்கோபோனி ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விைலும் அதிர்ஷ்டம் வந்து ஒரு முறை கதவைத் தட்டும். ஆனால், பல சந்தர்ப்பங்களில் மனிதன் அப்பொழுது பக்கத்தில் வெளியே எங்காவது போயிருப்பான். அது தட்டுவது அவன் காதில் விழுவ தில்லை. ைமார்க் டுவெயின் உண்மையில் எது நல்லதிருஷ்டம், எது துரதிருஷ்டம் என்பது நமக்குத் தெரியாது. அ ரூஸோ நல்லவர்களுடைய துரதிருஷ்டம் அவர்களை வானைநோக்கி முகங்களைத் திருப்பும்படி செய்கின்றது. கெட்டவர்களுடைய துரதிருஷ்டம் அவர்கள் தரையை நோக்கித் தலைகளைத் தொங்கவிட்டுக்கொள்ளும்படி செய்கின்றது. அ ஸாஅதி அதிர்ஷ்டம் மெலிந்தவர்களைத் தண்டிக்கும் தடி தைரிய முள்ளவர்களுக்கு அது ஊன்றுகோல். அ லோவெல் அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க வேண்டாம் ஒழுக்கத்தை நம்பியிருங்கள். அ பப்ளியஸ் ஸிரஸ் தானே தன் நிலைமையைச் செம்மைப்படுத்திக்கொள்ளும் பொறுப்பு ஒருவனுக்கு ஏற்பட்டால், அதுவே அவன் அதிருஷ்டத்தின் மடியில் தவழ்வதாகும். அப்பொழுதுதான் நம் அறிவு ஆற்றல்களெல்லாம் வளர்ச்சியடைந்து முன்பு கண்டிராத அளவுக்கு வலிமை பெறுகின்றன. ைபிராங்லின் அநேகருக்கு அதிருஷ்டம், அளவுக்கு அதிகமாய்க் கொடுக்கின்றது. ஆனால், எவருக்கும் போதிய அளவு அளிப்பதில்லை. க. மார்ஷியல்