பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/232

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி : 247 நேர்மை உன்னை யோக்கியமான மனிதனாகச் செய்துகொள் பின்னர் உலகில் ஒர் அயோக்கியன் குறைந்தான் என்பது நிச்சயம். கார்லைல் கடவுள் படைப்பில் நேர்மையான மனிதனே தலைசிறந்தவன். A போப் நேர்மையும் நல்லியற்கையும் இல்லாதவனுக்கு. மற்ற அறி வெல்லாம் தீமையாகும். அ மாண்டெயின் கண்ணியமான மனிதனே இல்லையென்று எவன் சொல்லு கிறானோ, அவன் அயோக்கியன். A பெர்க்லி தீய வழியில் இலாபம் அடைய எண்ணுவது நஷ்டத்திற்கு ஆரம்பம். - டெமாகிரிடஸ் கண்ணியமான புகழுக்கு எது வழியென்று சாக்ரடீஸிடம் கேட்ட பொழுது, அவர் கூறியதாவது: "நீ வெளியே எப்படித் தோன்ற விரும்புகிறாயோ அப்படி ஆகிவிடப் பயிற்சிசெய்.” நோக்கங்கள் உடலுக்கு ஆன்மா எப்படியோ, மரத்திற்கு வேர் எப்படியோ, அப்படிச் செயல்களுக்குச் சரியான நோக்கங்கள் இன்றியமை யாதவை. அ எலிம்மன்ஸ் மனிதனுடைய செயல்களிலும், இயற்கையின் வேலைகளிலும், நோக்கமே முக்கியமாக ஆராயத்தக்கது. அ கதே நோக்கங்கள் செயல்களைவிட மேலானவை. மனிதர்கள் குற்றத்தினுள் தாமாகச் சிக்கிவிடுகிறார்கள். தீமைகளை, அவர்கள் முன்னால் சிந்திப்பதைக்காட்டிலும், அதிகமாய்ச் செய்து விடுகிறார்கள். நன்மையில், அவர்கள் செய்வதைவிட, அதிகமாய்ச் சிந்திக்கிறார்கள். அ போவி