பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/237

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் ==

  • நீ படிப்பதைப்பற்றி, ஒவ்வொரு பகுதியையும் சிந்தனை செய்து பார். க. காலெரிட்ஜ்
  • சிறந்தவர்களோடு மட்டும் நம் மனம் உறவாடுவதற்குச் சிறந்த புத்தகங்களையே தேர்ந்துகொள்ள வேண்டும். டீ லிட்னி ஸ்மித்
  • அவன் தான் படித்ததில் ஒவ்வொன்றிலிருந்தும் அவன்

மதிப்புயர்ந்த விஷயம் எதையாவது எடுத்துக்கொண்டான். அ பிளினி

  • ஒரு நூல் முழுவதையும் வேகமாகப் படிப்பதைவிட ஒரு பக்கத்தை நன்றாக உணர்ந்துகொள்வது மேலாகும்.க மெகாலே
  • ஒரு புத்தகத்தைத் தொடங்கிவிட்டதற்காக மட்டும் அதை முழுதும் படிக்க வேண்டியதில்லை. அ விதர்ஸ்பூன்

பணம்

  • கையிலிருக்கும் பணம் அலாவுதீனுடைய விளக்கைப் போன்றது.

அ பைரன் 女 பணம் சமூகத்தின் ஜீவாதாரமான உதிரம். அ ஸ்விஃப்ட்

  • பணத்தைப் பயன்படுத்துவதுதான் அதைப் பெற்றிருப்பதன் பயன். அ ஃபிராங்க்லின்
  • பணம் உரத்தைப் போன்றது. அதை நன்றாகச் சிதறுவதைத் தவிர அதனால் வேறு பயனில்லை. அ பேக்கன்
  • முடிந்த அளவுக்குத் தேடு. முடிந்த அளவுக்குச் சேமித்துவை, முடிந்த அளவுக்குச் செலவழி. ைஜே. வெஸ்லி
  • பணம், அடித்தளம் தெரியாத ஒரு கடல், அதில் கெளரவம்.

மனச்சாட்சி, உண்மை ஆகியவையெல்லாம் மூழ்கிவிடக்கூடும். ைகோஸ்லே