பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி : 253 ஆன்மாவுக்குத் தேவையான ஒன்றை வாங்கக்கூடப் பணம் தேவையில்லை. ைதோ/ே பணத்தை இழித்து வெறுப்பது. ஓர் அரசனை அரியணையி லிருந்து இறக்குவது போன்றது. அ. சாம்ஃபோர்ட் பணம். பணத்தைப் பெறும் அதன் குட்டிகளும் பணம் பெறும். இவ்வாறு சேர்ந்துகொண்டேயிருக்கும். அ ஃபிராங்க்லின் உன் நம்பிக்கையைப் பணத்தின்மீது வைக்காதே பணத்தை நம்பிக்கையான இடத்தில் வைத்துவிடு. அ ஹோம்ஸ் பணம் நல்ல பணியாள்; ஆனால், மோசமான எசமானன். அ டிபெளஹர்ஸ் பணியாளர்கள் நல்ல பணியாளனுக்குச் சன்மானம் கொடுத்து ஆதரித்து வரவும். கெட்டவனை வைத்துக்கொண்டு அவனிடம் உரக்கக் கத்திக் கொண்டிருப்பதைவிட அவனை வெளியேற்றிவிடுவது மேல் க சேம்பர்ள் முன்னால் நான் என்னிடமிருந்த வேலையாள்களில் ஒவ்வொருவனையும் நண்பனாகக் கொள்ளலாம் என்று தவறாக எண்ணிக்கொண்டிருந்தேன்; ஆனால், இப்பொழுது அடிமை வேலை செய்வதன் இயற்கை நேர் மாறான குணத்தை உண்டாக்குகின்றது என்பதைக் கண்டுகொண்டுவிட்டேன். ஜனங்களுடைய குணம் அவர்களுடைய கல்வியிலிருந்தும், வாழ்க்கையில் அவர்களுடைய நிலையிலிருந்தும் அமை கின்றது. பிறப்பு மட்டும் அதிகமாய்ப் பாதிப்பதில்லை. அ வெடின்ஸ்டன்