பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/245

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 A உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் - பெறுவதற்கு ஒருவன் தானாக உயிர்துறக்கப் பழகவேண்டும். அ மகாத்மா காந்தி பலாத்காரம், தண்ணிரைப் போல், தான் வெளியேறுவதற்கு வழி கிடைத்துவிட்டால், மேலும் அதிக வேகத்துடன் பாய்ந்து செல்லும், க. மகாத்மா காந்தி ஆயிரம் தடவைகள் பலாத்காரம் தோல்வியுற்ற பின்னும், நாம் அது வென்றுவிடும் என்று மேலும் நம்பும் அளவுக்கு. நம் மனங்களில் அதற்கு அவ்வளவு பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது. அ விநோபா பாவே உண்மை என்னவென்றால், ஒருவன் செய்த பலாத்காரத்திற்கு இரண்டாமவன் அதிகப் பலாத்காரத்தைக் கையாள்கிறான். அதாவது, சொற்பத் தீமை செய்ததற்குக் கூடுதலான தீமையைத் திருப்பியளிக்கிறான். மூன்றாமவன் மேலும் அதிகமாகச் செய்கிறான். இவ்வாறு இறுதியில். இக்காலத்தில் நடைபெறும் சர்வ வியாபகமான யுத்தம் ஏற்படுகின்றது. - மகாத்மா காந்தி இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை பகைமையால் தணிவ தில்லை. பகைமை அன்பினாலேயே தணியும். A புத்தர் பழக்கம் ★ மனித இயற்கையன ஆழ்ந்தமைந்த சட்டம், பழக்கம்

ைகார்லைல்

ஒடைகள் ஆறுகளாவது போலவும், ஆறுகள் கடல்களில் பாய்வது போலவும். எல்லாப் பழக்கங்களும் கண்ணுக்குத் தெரியாமல் சிறிது சிறிதாக ஒன்றாய்ச் சேர்ந்துவிடுகின்றன. அ டிரைடன்