உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ւյ. 7aւooiuaւյ/rւb si: 261 = அறிவிலி ஒருவன் ஒரே கதையை நாள்தோறும். ஆண்டு முழுவதும். உன்னிடம் சொல்லிவந்தால், நீ அதையும் நம்பி விடுவாய். அ பர்க் நல்ல செயல்களைச் செய்து பழக்கமாகும் பொழுது. அவை எளிதாக விளங்குகின்றன. அவை எளிதாயிருக்கும் பொழுது. நாம் அவைகளில் மகிழ்ச்சியடைகிறோம். அவைகளை அடிக்கடி செய்கிறோம்; திரும்பத்திரும்பச் செய்வதால், அவை ஒரு பழக்கமாகிவிடுகின்றன. அ டில்லோட்ஸன் பழக்கத்தின் சங்கிலிகள் பொதுவாக அவை இருப்பதாகவே உணர முடியாதபடி அவ்வளவு சிறியவையாய் இருக்கும். அவை வலிமை பெற்று உடைக்க முடியாதபடி இறுகும்வரை. நாம் அவைகளை உணர்வதில்லை. அ. ஜான்பைன் பழக்கத்தைத் தடுக்காவிடில். அது விரைவில் அவசியமாகி விடும். அ அகஸ்டைன் நாம் அனைவரும் பழக்கத்தின் அடிமையாயிருக்கிறோம். அ ஃபான்டெயின் உலகத்தின் சுதந்தரத்திற்காக உயிரைத் தியாகம் செய்ய மனிதர்கள் முன்வருவார்கள். ஆனால், தங்களுடைய பழக்கங்க ளாகிய அடிமைத் தளைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள அவர்கள் சிறு தியாகங்கூடச் செய்யமாட்டார்கள் என்பது ஆச்சரியமல்லவா? ைபுருஸ் பார்ட்டன் மனிதன் பலவீனம் துயரம் எல்லாவற்றிற்கும் எப்பொழுதும் காரணமாயிருப்பது பலவீனமான சிந்தனைப் பழக்கமே. அ ஹொரேஸ் ஃபிளெச்சர் "பிளேக் நோய் ஒட்டுவாரொட்டியாகப் பக்கத்தில் வருபவர் களையும் எப்படிப் பாதிக்கின்றதோ, அதே போல், கெட்ட பழக்கங்கள் முன்மாதிரிகளாயிருந்த மற்றவர்களையும் பற்றிக் கொள்கின்றன. க. பீல்டிங்