உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி : 265 பாராட்டுவதில் தாமதம் செய்தல் அன்புக் குறைவையும். பொறாமை உணர்ச்சியையும் காட்டும். அ எச். மோர் பாவம் பாவம் என்பது இறைவனிடமிருந்து விலகிச் செல்வதாகும்.

ைலூதர் பாவத்தில் வீழ்பவன் மனிதன், பாவத்திற்காக வருந்துபவன் முனிவன் பாவத்தைப்பற்றிப் பெருமையாய்ப் பேசுபவன் சைத்தான். அ ஃபுல்லர்

பாவம் முதலில் இனிமையாயிருக்கும், பிறகு, அது எளிதில் வளரும் பிறகு, மகிழ்ச்சி பெருகும். அப்படியே அது உறுதியாகி விடும்: பின்னர் மனிதன் செய்ததற்கு வருந்த மாட்டான் ஒரே உறுதியுடனிருப்பான் மேற்கொண்டு வருந்தவே கூடாது என்று தீர்மானித்துவிடுவான்; அதற்குப் பின்னால் அவன் அழிந்தவன் தான். உ. லெய்டன் பாவம் ஒருகாலும் நிலையாக நின்றுகொண்டிருப்பதில்லை; அதிலிருந்து நாம் பின்னால் தரும்பச் செல்லாவிட்டால் நாம் அதிலேயே சென்றுகொண்டிருப்போம். க. பார்ரோ பாவம் காலையில் மிகப் பிரகாசமாக விளங்கும். இரவில் அது இருளைப்போல் கருமையாக முடிவடையும். அ டால்மேஜ் தீய மனிதர்கள் அச்சத்தினால் பாவத்தை வெறுக்கின்றனர். நல்ல மனிதர்கள் நற்பண்பிலுள்ள ஆர்வத்தினால் பாவத்தை வெறுக்கின்றனர். அ. ஜூவினால் பாவத்தைப்பற்றி அலட்சியமாயிருப்பவனிடம் கடவுளைப் பற்றிய பெரிய சிந்தனைகள் இருக்கமாட்டா. ைஒவன் கடவுள் என்னை மன்னிப்பாரென்றும். மனிதர்கள் என் பாவத்தைத் தெரிந்துகொள்ளமாட்டார்கள் என்றும் எனக்கு,