பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ, 7τιρωήνων/τιδ' :: 273 மனத சமூகத்தின் நன்மையை நாடி உழைப்பதன் மூலமே உண்மையான, நிலையான புகழை நிறுவ முடியும். அ. சார்லஸ் பெம்மர் புகழுக்குச் சுருக்குவழி மனச்சான்றின்படி நடத்தல். ஒரு சமூகத்தின் புகழும், ஒரு சகாப்தத்தின் புகழும் ஒருசில பெரிய மனிதர்களின் வேலையைப் பொறுத்தவை.அவர்களோடு அவைகளும் மறைந்துவிடுகின்றன. அ. கிரிம் நமது புகழ் என்பது. ஆண்களும் பெண்களும் நம்மைப்பற்றி என்ன நினைக்கின்றனர் என்பது நம் பண்பு, இறைவனும் தேவர் களும் நம்மைப்பற்றி என்ன நினைக்கின்றனர் என்பது. க பெயின் உனது குணம் சரியாயிருந்தால், உன் புகழும் சரியாயிருக்கும். நல்லெண்ணமும் பெயரும் பற்பல செயல்களை வைத்து உண்டாவது. ஆனால், இரண்டும் ஒரே செயலில் போய்விடவும் கூடும். க. ஜெய்ப்ரே புதியன படைத்தல் புதிதாக ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவன் மனிதனின் ஆற்றலை வளர்ப்பதுடன், மனித சமூகத்தின் நல்வாழ்வையும் பெருக்குகிறான். அ பீச்செர் நாம் புதியதைக் கண்டுபிடிக்காவிட்டாலும், இருப்பதையாவது அபிவிருத்தி செய்ய முடியும். அ கோல்டன் புதுமை மனித சமூகத்தை ஆட்டிவைக்கும் உணர்ச்சிகளுள் புதுமை மோகமே மனத்தை அதிகமாகக் கவர்கின்றது. * ..... உ. அ. - 18