ப. ராமஸ்வாமி : 277 புன்மையான உணர்ச்சி பணத்திற்குக் கேடு ஆளுக்கு எதிரி; மனத்திற்கு விரோதம் மனச்சாட்சியை அரிப்பது அறிவுக்குப் பலவீனம்: புலன்களை மயக்குவது உடல் அனைத்திற்குமே தீயது en 7erfeof) ஒரு பகைவனுக்கு அன்பு காட்டினால் அவன் உன் நண்பனாவான். ஆனால், புன்மையான உணர்ச்சி அப்படியல்ல. அதற்கு உபகாரம் செய்யச் செய்ய அதன் பகைமை அதிகரிக்கும். அ எலா அதி புன்னகை சிரிக்க முடியாத முகம் நல்லதாயிருக்க முடியாது. க. மார்ஷியல் சிரிப்பு பகல் அமைதி இரவு புன்னகை அந்தி ஒளி. அது அவ்விரண்டுக்கும் நடுவே தவழ்ந்து, அவைகளைவிட மயக்கும் சக்தியுடையது. அ பீச்செர் அன்பு இன்பம், மகிழ்ச்சி ஆகியவற்றை அணிவது புன்னகை. அவை முகத்தின் சாளரத்தில் ஒளிரும் ஒளி. அதன் மூலம் ஒருத்தி தன் தந்தை கணவர் அல்லது நண்பருக்கு வரவு கூறி இன்புறுத்துகிறாள். -ன் பீச்செர் இயற்கையின் அழகுக்குக் கதிரொளிபோல, பெண்ணின் முகத்திற்கு அழகிய புன்னகை ஏற்றது. அது விகார முகத்திற்கும் அழகூட்டும். க லவேட்டர் ஒருவர் புன்னகை புரியும் முறையைக்கொண்டு அவர் குணத்தைப்பற்றி ஏதாவது தெரிந்துகொள்ளலாம். சிலர் சிரிப்பதேயில்லை. ஆனால், இளிக்க மட்டும் செய்வார்கள். அ போ W ,ു് உரக்கச் சிரித்தல் சாதாரண மக்களின் மகிழ்ச்சியைக் காட்டுவது. அற்ப விஷயங்களிலேயே அவர்களுக்கு ஆனந்தம் வந்து
பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/262
Appearance