உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி : 283 எந்த மனிதனும் உண்மையையே நாடிச் சென்றால், அவன் உண்மையையும் பெருமையையும் சேர்த்துப் பெறுவான். . ஹொரேஸ் மான் பெருமை என்பது ஒரு பெரிய உள்ளத்தின் பயனாகும். அதன் இலட்சியமன்று. . வா. ஆல்ஸ்டன் தன் வாழ்க்கை தன் சமூகத்திற்கு உரியதென்றும் தனக்கு இறைவன் அருளியவையெல்லாம் மானிட சமூகத்திற்காக அருளியவை என்றும் ஓரளவு உணராத மனிதன் எவனும் உண்மையான பெருமையை அடைந்ததில்லை. அ ஃபிலிப்ஸ் புருக்ஸ் சிலர், பிறப்பிலேயே பெருமையுடன் வருகின்றனர். சிலர், பெருமையை அடைகின்றனர். சிலர்மீது பெருமை திணிக்கப் பெறுகின்றது. ஷேக்ஸ்பியர் பெற்றோர் கடவுளுக்கு அடுத்தபடியாக உங்கள் பெற்றோர்களைப் பேணுங்கள். - பென் பெற்றோர்களின் குரல்கள் தெய்வங்களின் குரல்கள். ஏனெனில், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இறைவனின் பிரதிநிதிகளாக விளங்குகின்றனர். நாம் நம் குழந்தைகளுக்குக் கற்பிப்பதுபற்றிப் பேசுகிறோம். நம் குழந்தைகளும் நமக்குப் போதிக்கின்றன என்பது நமக்குத் தெரியுமா? - திருமதி ஸிகோர்னி பெற்றோர் சந்தேகிப்பவராயிருந்தால், குழந்தை தந்திரமுள்ளதாக இருக்கும். அ ஹாலிபர்டன்