பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்





அநீதியானது எதுவும் தெய்வத்தின் திருவுளத்திற்கு எதிரானது ஆகவே, அநீதியாக நடப்பவர்கள் உண்மையான நிலையான இன்பம் அடைய முடியாது என்பது அதிலிருந்து தெரிகின்றது. க ஸ்டிரெச் பெருங்கூட்டமான மக்கள் தங்களை ஆள்பவர்களின் சுயநலத்தையும் அநீதியையும் தெரிந்துகொண்டால், எந்த அரசாங்கமும் ஒராண்டுகூட நிலைத்திருக்காது. உலகமே புரட்சியில் கொந்தளிக்கும். க. தியோடோர் பார்க்கெர் அரசனாயினும் சரி. மக்களுள் ஒருவனாயினும் சரி, எவனிடம் அதிகாரம் உளதோ, அவன் உண்மையையும் ஒழுக்கத்தையும் போற்றிக்கொள்ளாவிட்டால், அதிகாரத்தை நிச்சயம் துர் விநியோகம் செய்வான். அ லா.போன்டெயின் அநாதைக் குழந்தைகளின் செல்வங்களை அநீதியாக விழுங்குபவர்கள் நிச்சயமாக நெருப்பையே விழுங்கித் தங்கள் வயிறுகளில் இறக்க வேண்டியிருக்கும். கொழுந்து விட்டெரியும் நெருப்பிலே அவர்கள் வேகவேண்டியிருக்கும். அ குர் ஆன் அநீதிக்கு ஏற்ற அமைச்சன். ஏமாற்று. - அ பார்க் முறை தவறிச் சேர்த்த செல்வம் முட்கம்பிகளுள்ள அம்பு போன்றது. அதை உடலிலிருந்து வெளியே எடுப்பதில் பயங்கரமான வேதனை ஏற்படும். இல்லையெனில் அதுவே உனக்கு அழிவை உண்டாக்கிவிடும். அ ஜெரிமி டெய்லர் அவசரத்தாலோ அல்லது சோம்பலாலோ அல்லது இரண்டும் சேர்வதாலோ அநீதி ஏற்படுகின்றது. ஆத்திரக்காரரும் அயர்வுடையவரும் நீதியாக நடப்பது அரிது. அநீதியாளர் சிறிதுகூடப் பொறுத்திருக்க மாட்டார் அல்லது அதிகக் காலம் காத்திருப்பார். க விவேட்டர் அநீதிகள் அனைத்திலும், சட்டத்தின் பெயரால் இழைக்கப் படுவதே மிகவும் அநீதியானது கொடுமைகள் அனைத்திலும்