உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lv. Zatocřvar/ref' si: 285 女 புலனுணர்ச்சி ஒழுக்கங்களுக்கு எப்படியோ, அப்படி அறிவுக்கும் இதயத்திற்கும் பேரவா. க.திருமதி ஜேம்ஸன் பேரவா என்பது அதிகார ஆசை. எந்த இன்பத்திற்காக ஆசை ஏற்பட்டதோ, அந்த இன்பத்தையும் பலி கொடுத்து. அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்யப் பெறுகின்றது. அ கோல்டன் பேராசையை விட்டுத் தள்ளு. அந்தப் பாவத்தினால் அமரர்கள் வீழ்ச்சியுற்றனர். தன்னைப் படைத்தவரின் சாயலில் அமைந்த மனிதன் மட்டும் அதன் மூலம் வெற்றியடையலாம் என்று எப்படி நம்ப முடியும்? அ ஷேக்ஸ்பியர் பேரவா சாதாரண மக்களிடமுள்ள தீமையன்று. மாண்டெயின் ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான். உலகில் பெருந்துயருக்குக் காரணமாயிருக்கின்றது. காபெட் பேரவா காதலைப் போன்றது. அது தாமதங்க்ளைத் தாங்காது. போட்டிகளையும் சகிக்காது. . டென்ஹாம் பேரறிவாளர் பேரறிவு இடைவிடாத கவனத்தின் மூலம் அமைவதைத் தவிர வேறில்லை. அ ஹெல்விடியஸ் பேரறிவு என்பது எனக்குத் தெரியாது; அது உழைப்பும் ஊக்கமுமேயாகும். க ஹோகார்த் பார்வையிலேயே விசேடத் திறமையுடன் பாாக்கும் உயர்ந்த ஆற்றலே பேரறிவு அ. ரஸ்கின் பேரறிவாளர் தமக்கு வேண்டிய பாதைகளைத் தாமே அமைத்துக் கொள்வர். தமக்கு வேண்டிய தீபத்தையும் தாமே எடுத்துச் செல்வர். அ வில்மா