288 o:
- உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்
== வெளியேற்றிவிட வேண்டும். அவைகளுள் எது பெரிது. எது மிகவும் மோசமானது என்று கவலையே வேண்டியதில்லை. அ ரஸ்கிள் ஒருவன் பொய் சொல்லுவதை ஒரு நண்பன் கண்டுகொண்டு விட்டால், அது நட்புக்கே பெரிய அதிர்ச்சியாகும். அதுமுதல் நம்பிக்கையும் குறைந்து போகும். A ஹாஸ்விட் பாதி உண்மை முழுப் பொய்யாகும். உண்மையைப் பொய்யால் சோடனை செய்து தவறான முறையில் கூறுவோனே பொய்யர்களுள் இழிவானவன். க. இ. எல். மகூன் எல்லாவற்றிற்கும் மேலே இதை வைத்துக்கொள் நீ உனக்கு உண்மையாக நடந்துகொள்: பிறகு இரவைப் பகல் தொடர்வது போல, நீ வேறு எந்த மனிதனுக்கும் பொய்யனாக மாட்டாய்.
ைஷேக்ஸ்பியர்
பொய்யன் கடவுளிடமும் தைரியமாயிருப்பான். ஆனால், மனிதர்களிடம் கோழையாகவே இருப்பான். மாண்டெயின் பொய்யினால் ஒருவன் அடையும் ஆதாயமெல்லாம் இதுதான். அவன் உண்மையைச் சொல்லும் போதும் எவரும் நம்பமாட்டார். க. அரிஸ்டாட்டில் ஒருவன் ஒரு பொய்யைச் சொல்லிவிட்டால், அவனுக்கு நல்ல நினைவு இருக்க வேண்டும். e ๕rricsfs) - *A பொய்யர்கள் எல்லா வெட்கத்தையும் விட்டவர்கள். அத்னால் எல்லா உண்மைகளையும் கை விட்டவர்கள். துருக்கி நாட்டுச் சட்டத்தில் பல விஷயங்கள் எனக்கு உவப்பானவை: அங்கே பிரசித்தமாகப் பொய் சொன்னதாக