உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

  • பாசாங்கு மலிந்த இந்த உலகிலே, நடக்கும் பாசாங்கு களிலெல்லாம் மதிப்பிடுதல் என்னும் பாசாங்கிலிருந்து என்னைக்

காப்பாற்ற வேண்டுகிறேன். அ ஸ்டெர்னி

  • நல்லதை எடுத்துக்காட்டுவதே விமரிசனத்தின் நியாயமான

நோக்கம். அ போவி மரணம்

  • மரணம் இயற்கையானது மிகவும் அவசியமானது பிரபஞ்சத்தில் எங்குமுள்ளது. இததகையதை இறைவன் மனித சமூகத்திற்குத் தீமையாக அமைத்திருக்கவே முடியாது. ைஸ்விஃப்ட்
  • மரணம் நமக்கு வேண்டியவர் ஒருவர்மீது கை வைக்கும் பொழுதுதான். மரணத்தைப்பற்றி முதன் முதலாக நாம் உணர்ந்து கொள்கிறோம். அ. திருமதி டி ஸ்டேல்
  • மனிதர்கள் வாழ்க்கையைத் தாங்கியிருக்க வேண்டும் என்பதற்காகத் தெய்வங்கள் மரணத்தின் இன்பத்தை அவர்கள் உணர முடியாதபடி மறைத்து வைக்கின்றன. அ லூகான்
  • ஒருவன் வெற்றி வீரனாகவோ, அரசனாகவோ, நீதிபதியாகவோ வாழ்ந்திருக்கலாம்; ஆனால், அவன் மனிதனாகவே மரிக்க வேண்டும். அ. டேனியல் வெப்ஸ்டர்
  • உன்னை மரணம் எங்கும் எதிர்பார்த்திருக்கிறது. ஆதலால், நீ தன்னறிவோடு அதை எங்கும் பார்த்திரு. அ குவார்லெஸ்

ல் சாக்ரடிஸ் ஒரு தத்துவ ஞானியைப் போல இறந்தார். ஏசு கிறிஸ்து ஒரு தெய்வத்தைப் போல உயிர் நீத்தார். ைரூஸோ

  • உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு. 2 திருவள்ளுவர் .