பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ. Ζητωρωήνου/τώβ' :: 309 யுத்தம், காட்டுமிராண்டிகளின் தொழில். க நெப்போலியன் விளையாட்டுக்கான பொம்மைச் சிப்பாய்களையும் ஒழித்துவிட வேண்டும். குழந்தைகள் வளர்ப்பு நிலையத்திலிருந்து முதலில் ஆயுதங்களை அப்புறப்படுத்துவோம்! அ டாக்டர்பாலினாலூய்லி யுத்த தளவாடங்களைப் பெருக்க வேண்டுமென்று கூறுவோர் களுக்கு இரக்கப்பட்டு, நாம் அவர்களை மன்னிப்போம். ஏனெனில், அவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம். என்பதை அறியார்கள்: அ ஆண்ட்ரூ கார்னிஜி மூளையால் வேலை செய்யும் அறிவாளி. சமூகத்தில் செய்ய வேண்டிய வேலை ஏதாவது இருந்தால், அது இதுதான் அவர் பாரபட்சமின்றி, தாமும் உணர்ச்சி வெறி கொள்ளும்படி ஏற்படும் துண்டுதலை விலக்கிவிட்டு, அமைதியான மனநிலையுடன் இருக்க வேண்டும். போர் நடக்கும் பொழுது, சிக்கனம், பொது சுறுசுறுப்பு. நன்மைக்கு உழைத்தல் போன்ற சாதாரணப் பண்புகள் கூட போரில் அழிவுவேலைகளைப் பெருக்கி, இருகட்சியினரும் ஒருவரையொருவர் வதைத்துக்கொள்ள அதிக ஆற்றலை உண்டாக்கப் பயன்படுத்தப்பெற்றன. அ. பெர்ட்ரான்ட் ரஸ்லல் ஒரே ஒரு நல்ல பண்புதான் உளது. அதுதான் போர் வெறி ஒரே ஒரு கெட்ட பண்புதான் உளது. அதுதான் சாந்தியை விரும்புதல், இந்த நிலைதான் போருக்குத் தேவையானது. ஜி. பெர்னாட்ஷா போர்கள். போர்களை வழிக்க முடியாது என்பது எனக்கு இப் பொழுது தெரியும். அ ஹென்றி.ஃபோர்டு ஐந்து விஷயங்களை எதிர்த்துத்தான் மனிதன் போர் செய்ய வேண்டியது அவசியம்: உடலின் பிணிகளையும், மனத்தின் அறியாமையையும். புலன்களின் உணர்ச்சிகளையும், நகரிலுள்ள அரசாங்கத் துவேஷத்தையும், குடும்பங்களிலுள்ள பிணக்கு களையுமே எதிர்க்க வேண்டியிருக்கின்றது. அ யாரோ வக்கீல்கள் வக்கீல்கள் நியாயம், அநியாயம் என்றில்லாமல், எல்லா வழக்குகளையும் ஆதரித்துப் பேசவேண்டியிருக்கின்றது. க. ஜூனியஸ்