பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி

29மகிழ்ச்சியில் பங்கு கொள்ளும்பொழுது அது இரட்டிப்பாகி விடுகின்றது. ைஜெரிமி டெய்லர் கையால் அளிப்பவை வெள்ளியும் பொன்னும். ஆனால், இதயம் அளிப்பதை வெள்ளியாலோ பொன்னாலோ விலைக்கு வாங்க முடியாது. அ பீச்செர் துக்கம் என்ற கல் ஒருவனைக் கீழே ஆழ்த்திவிடும். ஆனால், இருவர் சேர்ந்தால் அதை எளிதில் தாங்கலாம். க. டபுள்யு ஹாஃப் அருட்செல்வம் செல்வத்துள் செல்வம். க. திருவள்ளுவர் பேர் இல் பிறந்தமை ஈரத்தின் அறிப. க. முதுமொழிக்காஞ்சி ஈரமில் லாதது கிளை நட்பு அன்று. க. முதுமொழிக்காஞ்சி பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய் கண்டு உள்.ாம்ப எரியின் இழுதாவர் என்க. - தெரியிழாய்! மண்டு பிணியால் வருந்து பிறஉறுப்பைக் கண்டு கலுழுமே கண். அ. நன்னெறி 'அநுபவம் அநுபவம் ஒரு நம்பகமான விளக்கு அதைத் துணையாகக் கொண்டு வழி நடக்கலாம்: ஒரு மனிதன் வெற்றியடைவதற்குத் தான் முன்னால் கையாண்ட வழிகளையே எதிர் காலத்தில் பயன்படுத்த எண்ணினால், அவனை ஆலோசனையில்லா தவன் என்று சொல்ல முடியாது. அ. வெண்டல் ஃபிலிப்ஸ் பழமைகளின் கனி, அநுபவம், அதுவே எதிர்காலங் களையெல்லாம் உருவாக்குகின்றது. அ ஆர்னால்டு அநுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும் தவறுகள் அதற்குரிய செலவுகள். - E ஃப்ருடு