பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/304

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ. αααρωυονταθ' :i: 319 நிலையான கருத்துடன் இருத்தல் என்பது என்னுடைய இலட்சிய வாக்கியம். முதலில் யோக்கியதை, பிறகு சுறுசுறுப்பு. பிறகு நிலையான கருத்துக்கொள்ளல். ைஆண்ட்ரு கார்னிஜி எனக்கு அன்பும் வேலையும் கொடுங்கள் - இந்த இரண்டும் போதும். அ வில்லியம் பாரிஸ் மனிதன் ஒரு தொழிலாளி. அவன் அப்படியில்லையானால், அவன் எதுவுமில்லாதவன். க. ஜோஸஃப் கான்ராட் முதலாளிகளால் தொழிலாளி நசுக்கப்படாமலிருக்கவும் தொழிலாளரால் மூலதனம் போட்டவர்களுக்கு இடையூறில்லாம லிருக்கவும். தொழிலாளரே தொழிலாளரை அடக்காமலும். முதலாளிகளே முதலாளிகளை நசுக்காமலும் இருக்கும் நிலையை உண்டாக்க வேண்டுமென்ற முறையில், நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். அ. ஜான் டி ராக்ஃபெல்லர் வைகறை காலையில் அதிக நேரம் படுக்கையில் படுத்திருக்கும் எவரும். பெருமையோ புகழோ பெற்றதை நான் கண்டதில்லை. அ ஸ்விஃப்ட் பெரிய வேலைகளை நிறைவேற்ற வேண்டியவர்கள் அதி காலையில் எழுந்திருக்கவேண்டும். தூக்கத்தில் பற்று வைக்க வேண்டாம். வைத்தால், வறுமை வந்துவிடும். எம். ஹென்றி ஒவ்வொரு நாள் இரவிலும் மறுநாள் காலையில் விரைவாக எழுந்திருக்கவேண்டுமென்று நான் மனத்தில் உறுதி கொள்வேன். ஆனால், ஒவ்வொரு நாள் காலையிலும். நான் உடலைக் கட்டிலிலேயே சாய்த்துக்கொண்டிருப்பேன். அதிகாலையில் வீசும் மென்காற்றை அனுபவித்தவர்களுக்கு. ஒரு நாளில் மிக இனிய நேரம் அதுவே என்பதும், உற்சாகமாக வேலை செய்யக்கூடிய நேரம் என்பதும் தெரியும். ஆனால், பொதுவாக அந்த நேரத்தைப் படுக்கையிலே கிடந்து வீணாக்கு