பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்





ஆழ்ந்த உண்மையான இதயபூர்வமான நேர்மை .ண்மையும் பெருந்தன்மையுமுள்ள மானிடப் பண்பாடாகும். நாம் நினைப்பது போலப் பேசுதலும், நாம் பாவனை செய்வது போல உண்மையில் செய்வதும், நாம் வாக்களிப்பதை நிறை வேற்றுவதும், வெளித்தோற்றத்தில் நாம் எப்படி இருக் கிறோமோ அப்படியே அக ஒழுக்கத்தில் இருப்பதும் அந்தரங்க நேர்மையாகும். அ டில்லோட்லன் புறத் தோற்றத்தில் நாம் தோன்ற விரும்புவது போலவே உண்மையாகவும் இருந்துவிட வேண்டும். அதுவே உலகில் நாம் கெளரவமாக வாழ்வதற்கு ஏற்ற சுருக்கு வழி. அடிக்கடி உபயோகிக்கும் அநுபவத்தின் மூலமே மானிடப் பண்புகள் வலிமை பெறுகின்றன. - = அ. சாக்ரடிங் அவனுடைய சொற்கள் உறுதிமொழிப் பத்திரங்கள், அவன் கூறும் ஆணைகள் அசரீரி வாக்குகள், அவன் சிந்தனைகள், தூய்மையானவை. அவனுடைய கண்ணிர்த் துளிகள் அவன், இதயத்தின் துதர்கள். அவனுடைய இதயத்திற்கும் ஏமாற்றுக் கும் உள்ள தூரம் வானத்திற்கும் பூமிக்கும் உள்ள தூரம் போன்றது. * e ஷேக்ஸ்பியர் நேர்மையும் சத்தியமும் ஒவ்வொரு பண்புக்கும் அடிப் படையாகும். க. கன். புவியல் மனமொன்று. சொல்லொன்று. வான்பொருளும் ஒன்றே, கனமொன்று மேலவர்தம் கண். அ நீதிவெண்பா, அபாயம் கூச்சமுள்ளவன் அபாயம் வருமுன்பே நடுங்குவான். கோழை. அது வரும்பொழுது நடுங்குவான் தைரியமுள்ளவன் வந்த பிறகு அஞ்சுவான். - ரிச்டெர்