உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்





கருணையுள்ளது என்பதையும் ஒரு கணநேரங்கூட ஐயுறச் செய்ய முடியாது. நான் இவ்வாறு உணர்கிறேன். நம்புகிறேன். விரும்புகிறேன். எதிர்பார்க்கிறேன். என் மூச்சு உள்ளவரை நான் இந்தக் கொள்கையைக் கைவிடேன். க. ருலோ

  • சிறு துயிலுக்குப் பின்னால் நாம் விழிப்படைந்து அமரராகி விடுகிறோம். அப்பால் மரணம் என்பதில்லை. அ. டோன்

அமிதமான நடை

  • அமிதமான கருத்துகள் நியாயமாயிருப்பதில்லை.

க. டாங்க்ரெட்

  • ஒவ்வொரு விஷயத்திலும் நடுவான நிலை ஒன்றுண்டு. நல்ல பண்புக்குக்கூட எல்லைகளுண்டு. அவைகளைத் தாண்டிச் செல்வது பண்பாகாது. அ ஹொரேஸ்
  • அமிதமானவை. ஒன்றுக்கொன்று மாறுபட்டிருந்தாலும் பயனில் ஒன்றுபோலிருக்கின்றன. அமித உஷ்ணம் மான முண்டாக்குகின்றது. அது போலவேதான் அதிகக் குளிர்ச்சி யும். அமிதமான காதல் தெவிட்டிவிடுகின்றது. அதுபோலவே தான் அதிகமான வெறுப்பும். அளவுக்கதிகமான கட்டுப்பாடு | கற்புக்கே சோதனையாகின்றது. அது போலவேதான் விருப் பம்போல் திரிவதும். க. சாப்மென்
  • எல்லாவற்றையும் நல்லனவாகவும். எல்லாவற்றையும் தீயனவாகவும் பார்க்கும் மனிதரை நம்ப வேண்டாம் எதையும் இலட்சியம் செய்யாமலிருப்பவனைச் சிறிதும் நம்பவே வேண்டாம். அ லாவேட்டர்
  • மிகப்பெரிய வெள்ளமும் விரைவிலே வடிந்துவிடுகின்றது.

மிகவும் கோரமான புயலும் திடீரென்று அமைதியாகி விடுகின்றது. அளவற்ற அன்பும் அவிந்து அடங்குவதில்