பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

மனிதர்கள் ஆண்டவனிடத்திலும் அறிவினிடத்திலும் நம்பிக்கை வைத்திருந்தால், அவர்களிலே பெரும்பாலோரைக் கொண்ட அரசாங்கம், இறுதியில் அறிவாளர்களையும் பெரியோர்களையும் முதன்மையாகக்கொண்டு விளங்கும். அ ஸ்பால்டிங் மிகத்தாழ்ந்த நிலையிலுள்ள ஒருவருக்கு நேர்ந்த தீங்கை எல்லோருக்கும் ஏற்பட்ட அவமதிப்பாகக் கருதும் நிலையில் ஆட்சி புரியும் அரசாங்கமே தலைசிறந்ததாகும். அ ஸோலன் அரசாங்கங்கள் அமைக்கப்பெறுவதில்லை. ஒட்டு வேலை களால் உண்டாக்கப்பெறுவதில்லை. அவை வளர்ந்து உருவா கின்றன. பல நூற்றாண்டுகளாகப் பல துயரங்களை அநு பவித்துக்கொண்டு அவை மெதுவாக வளர்ந்து வந்துள்ளன. ைஜான் மாஸ்ஃபீல்டு அரசர்கள், ஏகாதிபத்தியங்களின் உண்மையான வலிமை சேனைகளிலும் உணர்ச்சிகளிலும் இல்லை. ஆனால், அவர்கள் கபடமில்லாமலும், உண்மையாகவும், சட்டப்படியும் நடக்கிறார்கள் என்று மக்கள் கொள்ளும் நம்பிக்கையிலேயே அது அமைந்துள்ளது. அந்த உயர் நிலையிலிருந்து ஒர் அரசாங்கம் விலகியவுடன். அது ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டுள்ள ஒரு கூட்டத்தைத் தவிர வேறில்லை. அதன் முடிவு காலமும் நெருங்கி நிற்கும். அ எச். ஜி. வெல்ஸ் இறைவனுக்குக் கீழ்ப்படிந்துள்ள இந்தத் தேசிய சமூகம் சுதந்தரத்துடன் புதுப் பிறவியை அடைய வேண்டும். அதனால், மக்களுடைய, மக்களால் நடத்தப்பெறும், மக்களுக் கான அரசாங்கம் பூமியிலிருந்து மறைந்துவிடாமல் இருக்க வேண்டும். க ஆபிரகாம் லிங்கன் தாழ்ந்த நிலையிலுள்ள மக்களுக்கு ஜனநாயகம் ஒரளவு நல்வாழ்வை அளித்து வருவதுதான். அது அடைந்துள்ள வெற்றியாகும். முற்றிலும் நல்வாழ்வை அளிக்காவிட்டாலும் அது அளிக்க முயற்சி செய்கின்றது. இந்தக் காரணத்